1. பெரியார் காசிக்குச் சென்றபோது அவரோடு சென்ற இரு பார்ப்பனர்கள் காசியை அடைந்ததும் அவரைப் பிரிந்து சென்றமை ஏன்?
அ) அவர்களுடைய உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். ஆ) வேத மந்திரங்கள் தெரிந்ததால் கோவில்களில் பூஜை செய்யச் சென்றுவிட்டார்கள். இ) எல்லாச் சத்திரங்களிலும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே சோறு என்பதால். ஈ) பெரியாரின் பிடிவாதத் தன்மை பிடிக்காததால்.
2. 1938ஆம் ஆண்டு சென்னையில் நடந்த மகளிர் மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு வழங்கப்பட்ட பட்டம்
அ) வைக்கம் வீரர் ஆ) பெரியார் இ) ஈரோட்டுச் சிங்கம் ஈ)வெண்தாடி வேந்தர்.
3. 1958இல் பெரியார் உரையாற்றிய வட இந்தியப் பல்கலைக்கழகம் எது?
அ) நாலந்தா பல்கலைக்கழகம் ஆ) கல்கத்தா பல்கலைக்கழகம் இ) லக்னோ பல்கலைக்கழகம் ஈ) காசி பல்கலைக்கழகம்
4. பஞ்சாப் படுகொலையைக் கண்டித்து நாடெங்கும் பிரச்சாரம் செய்த தமிழ்த் தலைவர்?
அ) பாரதியார் ஆ)தந்தை பெரியார் இ) காமராசர் ஈ) சத்தியமூர்த்தி அய்யர்
5. கள்ளுக்கடை மறியலை நிறுத்துவது என் கையில் இல்லை, அது ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்களிடம் (கண்ணம்மாள், நாகம்மையார்) இருக்கிறது. அவர்களைத்தான் கேட்கவேண்டும் என்று பம்பாயில் நடைபெற்ற மாநாட்டில் காந்தியார் கூறிய கருத்து எப்போது, எந்தப் பத்திரிகையில் வெளியானது?
அ) 19.1.1922 தி ஹிந்து ஆ) 19.1.1922 இந்தியன் எக்ஸ்பிரஸ் இ) 19.1.1922 சுதேசமித்திரன் ஈ) 19.1.1922 யங் இந்தியா
6. தேசிய நிலையம் எனும் பெயரில் ஜாதி பேதத்தை வளர்த்த சேரன்மாதேவி குருகுலத்தை ஒழிப்பதற்கு தந்தை பெரியாருடன் சேர்ந்து போரிட்டவர் யார்?
அ) டாக்டர் வரதராஜுலு ஆ) எஸ். இராமநாதன் இ) திரு.வி.க. ஈ) மேற்சொன்ன மூவரும்
7. சேரன்மாதேவி குருகுலப் போராட்டத்தின் விளைவாக நிகழ்ந்தது…
அ) பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேறினார். ஆ) வ.வே.சு. அய்யர் குருகுலக் குழுவிலிருந்து வெளியேறினார். இ) குருகுலத்தைக் காங்கிரசே நடத்தியது. ஈ) குருகுலக் குழுத் தலைவராக பி. வரதராசுலு நாயுடு நியமிக்கப்பட்டார்.
8. முதல் சுயமரியாதை மாநாட்டில் மூடநம்பிக்கையை எதிர்த்துப் பேசிய ஏழு வயதுச் சிறுமி யார்?
அ) சத்தியவாணி முத்து ஆ) திருவண்ணாமலை லலிதா இ) டாக்டர் தர்மாம்பாள் ஈ) பூங்கோதை
9. பெண்களின் கல்விக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பு என்னவென்று பெரியார் கூறுகிறார்?
அ) பெண்கல்வி கற்பைப் பாதிக்காது
ஆ) படித்துவிட்டால் கற்பைப் பற்றிக் கவலை கொள்ளமாட்டார்கள்.
இ) பெண்களுக்கான கல்வியில் கற்பை வலியுறுத்த வேண்டும்.
ஈ) பெண்களைப் படிக்கவைத்துவிட்டால், தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக்கூடிய தன்மை வந்துவிடும்.
10. எத்தகைய சிந்தனையால் உயர்ந்த எண்ணங்கள் தோன்றுவதாக பெரியார் சொல்கிறார்?
அ) உண்மையும் பகுத்தறிவும் இடைவிடாத ஆர்வமும் உள்ள சிந்தனை ஆ) மதத்தை மறுக்கும் சிந்தனை இ) பொது நன்மையைக் கருதும் சிந்தனை ஈ) கடவுளை நம்பாத சிந்தனை