Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எட்ட முடியா ஈடில்லா நடை!

உன் நடையை

                நான் யாரிடம்

ஒப்பிடுவேன் – தலைவா

                உன் நடை

விளிம்பு நிலை மக்களின்

                விடுதலை விதை.

உன் நடை

                ஏற்றம் பெறாத

சமூகத்தின் எதிர்பாய்ச்சல்.

 

அதையெல்லாம் விடுவோம்

                இயல்பான – உன்

ரயிலடி நடைக்கு

                23 வயது நானே

மூச்செடுக்கிறேன்

                86ல் கூட முழுமூச்சாய்

நடக்கிறாய்.

                கூட்டத்தை விளக்கி

கொள்ளாமல்

                சட்டென பாய்கிறாய்.

திணறி போகிறோம்

                தலைவா…

தோழர்களை தோற்கடித்து

                முதற் தோழனாய்

முன்னோக்கி செல்கிறாய்

                அய்யாவின் அடிச்சுவட்டில்

அதனால்தான் உன்னால் மட்டும்

                ஓயாமல் நடக்க முடிகிறது!

 

இவர் எப்போதும்

                விரைவு வண்டி

வேட்டியை உயர்த்திப் பிடித்தால்

                அதி விரைவு வண்டி.

 

தமிழினத்தின்

                தடை உடைக்கிறாய்.

பெரியாருக்கு வாழ்நாளெல்லாம்

                நன்றியாய் உழைக்கிறாய்!

 

– த.மு.யாழ்திலீபன்