ஆரிய பார்ப்பனர்கள் தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று கூறி மற்றவர்களுக்குத் தீட்டு உண்டு என்று கூறுவது வழக்கம்.
ஆனால், தங்கள் வீட்டுக்குள் பார்ப்பான் வந்தால், தீட்டுப்பட்டுவிட்டதாகக் கருதுகின்றனர் குறிச்சான் என்ற பழங்குடி மக்கள். பார்ப்பான் தங்கள் வீட்டுக்குள் வந்து சென்றால், தீட்டு போக்குவதற்காக, பார்ப்பான் அமர்ந்த இடத்தை பசுவின் சாணத்தால் மெழுகும் வழக்கத்தைக் குறிச்சான் மக்கள் கொண்டுள்ளனர். இவர்கள் நீலகிரி மற்றும் கேரள வயநாடு பகுதிகளில் வாழ்கின்றனர்.