- சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் பிரிவின் தமிழகத் தலைவராக டாக்டர் டி. வடிவேல் முகுந்தன் பொறுப்பேற்றுள்ளார்.
- இந்தியாவில் மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்திற்குப் பதிலாக, வாக்குச் சீட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பெரும்பாலான கட்சிகள் தேர்தல் கமிசனிடம் வலியுறுத்தியுள்ளன.
- பாராளுமன்றத்தை முடக்கியதற்காக மக்களிடம் எதிர்க்கட்சியினர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
- விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய செய்தியால் இந்தியா – அமெரிக்க உறவு பாதிக்காது என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விக்கிலீக்ஸ் நிறுவனரிடம் உள்ள 2 1/2 லட்சம் ஆவணங்களை, தங்களால் பார்க்க முடியும் என நார்வே நாட்டின் முன்னணிப் பத்திரிகையான ஆப்டன்போஸ்டன் கூறியுள்ளது.
- உலகத் தலைவர்களின் பொன்மொழிகளைத் தெரிந்து கொள்ள உதவும் இணையதள முகவரி www.quotationbook.com.
- அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் பிறப்பித்த சுற்றறிக்கைகள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் புதிய வகை குளிர் அலமாரிகளை (ஃபிரிட்ஜ்) இங்கிலாந்தில் உள்ள லங்கானஷர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.
- கடும் பனிப்பொழிவுக் காலங்களிலும் 3 பி தொழில்நுட்பத்தில் விமானங்களைப் பாதுகாப்பாகத் தரையிறக்கலாம் என்று கோவை விமானப் போக்குவரத்து மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.
- தேசிய கடல்வாழ் உயிரினமாக டால்பின் வகை மீன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளி விஞ்ஞானி ஷூவோ ராய் செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கியுள்ளார்.
- ஜூன் 30 ஆம் தேதி முதல் 25 காசு நாணயம் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
- சிலோன் இனி, சிறிலங்கா என்ற ஒரே பெயரிலேயே அழைக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
- உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தையாக உள்ள விக்கிலீக்ஸ் விரைவில் ஆங்கிலப் பேரகராதியில் இடம் பெறும் என உலக மொழிக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.