பயன்மிகு செல்பேசியால் பாதிப்புகளும் உண்டு!

ஏப்ரல் 16-30

 

– க.காசிநாதன்

 

வாட்ஸ்ஆப் விபரீதங்கள்

தொழில்நுட்பம் வளர்வதற்கு இணையாக தொல்லைகளும் வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. வாட்ஸ்ஆப் அதிகமாக பயன்படுத்துகிறவர்களுக்கு (WhatsAppitis) என்ற பிரச்சினை ஏற்படுகிறது என்று சமீபத்தில்  கண்டுபிடித்திருக்கிறார்கள்.

வாட்ஸ்ஆப் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது கட்டை விரல் எலும்புகள், நரம்புகள் மற்றும் சவ்வுப் பகுதியில் வலி, வீக்கம், எலும்புத் தேய்மானம், விரல்களை இணைக்கின்ற இணைப்பில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. கைகளில் ஏற்படும் அழற்சியே வாட்ஸ்ஆபிடிஸ் என்கிறார்கள். இன்று சர்வதேச அளவில் வாட்ஸ்ஆபிடிஸ் அதிகரித்து வருகிற பிரச்சினையாக உள்ளது. உடலில் ஒரே பகுதியில் ஏற்படும் அதீத அழுத்தத்தால் உண்டாகும் வலியை  Repetitive Strain  Injury  என்கிறோம். வாட்ஸ்ஆபிடிஸ் அந்த வகை ஒன்றுதான்.

ஃபேஸ்புக் பேராபத்து

இன்றைய காலக்கட்டத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் அளவுக்கு அதிகமாய் அலைபேசியைப் பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள்,  இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இப்படிச் செல்போனை உற்றுப் பார்த்தபடியே இருக்கும் இவர்களுக்கு எதிர்நோக்கியிருக்கும் சவால் என்ன தெரியுமா? கிட்டப் பார்வைக் கோளாறு!

இன்றைக்கு நூறுபேரில் 40 பேர்கள் கண்ணாடி அணிய வேண்டியச் சூழ்நிலையில் இருக்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் கோட்பாட்டின்படி 5.00ஞி அதற்குக் குறைவான பார்வைத்திறன் நிலை உயர்கிட்டப் பார்வை  (High Myopia)) எனக் கருதப்படுகிறது. அத்தோடு மட்டுமல்லாமல் எந்நேரமும் செல்போன் ஒளித்திரையை உற்றுப் பார்த்தபடி இருந்தால், விழித்திரை பிரிதல், விழித்திரையின் உணர்வு நிலை குறைபாடுகள் (Retinoschisis) கண்ணின் பின்புறச் சுவரில் குறைகளை ஏற்படுத்தும்  Posterior Staphyloma   எனப்படும் பிரச்சினைகள், கண் அழுத்த நோய் (Glaucoma), கண்புரை  (Cataract), Lattice Degeneration   எனப்படும் வழித்திரை நோய் மற்றும் பின்புற விட்ரியஸ் பகுதியில் பிரிநிலை ஏற்படுதல்  (Posterior Vitreous Detachment) போன்ற விளைவுகள் ஏற்படலாம்.மரபியல் காரணங்களே, கிட்டப் பார்வை குறைபாட்டிற்கு அதிகக் காரணம் என்றாலும், சுற்றுச் சூழலியல்  (Environment and Situation) காரணங்களான கண்களுக்கு அருகிலிருந்தே செய்யக்கூடிய வேலைகள் மற்றும் கணினி, லேப்டாப், செல்போன் போன்ற நவீன மின்னணு சாதனங்களை கண்களுக்கு அருகிலேயே வைத்துக்கொண்டு செயல்படுவது போன்றவற்றின் காரணமாக தற்போது கிட்டப்பார்வைக் குறைபாடு மிக அதிகமாய் அதிகரித்துக் கொண்டுள்ளது.

வெளியே சென்று இயற்கையையும், சுற்றுச் சூழலையும் பார்ப்பது குறைந்து சதாசர்வகாலமும் அலைபேசியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதால் கண்களுக்கு இயற்கையாய்க் கிடைக்கும் விட்டமின் டி கிடைப்பது குறைகிறது. இதுவும் கிட்டப் பார்வைக்கு முக்கியக் காரணம். அடுத்த 30 ஆண்டுகளுக்குள் அதாவது 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் சுமார் 500 கோடிப் பேர் கிட்டப்பார்வை (Myopia) குறை பாட்டினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலகலாவிய பார்வை இழப்பைக் கட்டுப் படுத்தும் அமைப்பான  International Agency for Prevention of Blindness  அமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சித் தகவலொன்றை அறிவித்திருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் கிட்டப் பார்வைக் குறைபாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் உலகில் அதிக அளவு செல்போன் உபயோ கிப்பவர்கள் சீனர்களும் இந்தியர்களுமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *