Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாசகர் மடல்- “பெரியார் சிலை அல்ல – அரிய தத்துவம்’’

‘உண்மை’ இதழ் மிடுக்கோடும், பளிச்சிடும் வண்ணங்களிலும் பகுத்தறிவுக் கருத்துகளைத் தாங்கி வெளிவருவதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். குறிப்பாக, மார்ச் 16-31, 2018 இதழின் அட்டையில் இது பெரியார் மண்! எதிரிகளுக்கு உணர்த்திய இனத்தின் எழுச்சி! எனும் வைர வரிகளும் பெரியார் ஒளிப்படமும் இன எதிரிகளை மிரள வைத்தன. திராவிட இனத்தைப் பாதுகாக்கும் கேடயமாகவும், இன எதிரிகளை வீழ்த்தும் வாளாகவும் விளங்குகின்ற தந்தை பெரியார் “வெறும் சிலை அல்ல – அரிய தத்துவம்’’. தமிழ்நாடு பகுத்தறிவுக் கருத்துக்களால் பண்படுத்தப்பட்ட பெரியார் மண்ணா. எனவே, இங்கு நாத்திகர் – ஆத்திகர் என்ற பாகுபாடின்றி ஜாதி- மத வேறுபாடின்றி அனைவர் உள்ளங்களிலும் – இல்லங்களிலும் பெரியார்  நீங்கா இடம் பெற்றுள்ளார் என்பதே நிதர்சனமான உண்மை. ஆகவே, தந்தை பெரியாரின் தலைமகன் பேரறிஞர் அண்ணா கூறியது போன்று, தந்தை பெரியார் தனி மனிதரல்ல அவர் ஒரு சகாப்தம் – காலகட்டம்- திருப்பம் என்பதை எச்.ராஜா போன்றவர்கள் இனியேனும் உணர்ந்து நாவடக்கத்துடன் பேசுவது நல்லது.
– இல.சீதாபதி, திண்டிவனம்