பெண்ணியம் சார்ந்த பெரியாரின் சிந்தனைகள் அனைத்து மொழியிலும் வரவேண்டும்!

மார்ச் 16-31

மகளிர் முன்னேற்றத்திற்காக எப்படி யெல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டார் என்பதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்  வியாழனன்று (8.3.2018) காலை மாநிலங்களவையில் சர்வதேச மகளிர் தினம் சார்ந்து உரையாற்றுகையில், பேசியதாவது:

சர்வதேச மகளிர் தினம் என்பது ஒரு சடங்கு போன்று இருந்திடக் கூடாது. கடந்த 60-70 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆனால் மிகவும் அற்ப அளவில்தான். அதாவது 0.001 சதவீதம் அளவிற்குத்தான் – முன்னேற்றம் ஏற்பட்டி ருக்கிறது. அதேசமயத்தில் பணியிடங்களில் பெண்கள் துன்புறுத்தப்படுவது என்பது குறையவில்லை. சொல்லப்போனால் முன்பை விட மிகவும் மோசமான முறையில் இருக்கிறது. பெண்களின் பாதுகாப்பிற்காக நாம் சட்டங்களைப் பெற்றிருக்கிறோம். எனினும், சட்டத்தை அமல்படுத்த வேண்டிய அமைப்புகள் மிகவும் பலவீனமாக இருக்கின்றன. பெண்களின் வழக்குகளில் நீதிமன்றங்கள் நீதியை வழங்குவது இல்லை. நவீன தாராளமயக் கொள்கைகளின் காரணமாக தலித்துகளும், பழங்குடியினரும் மிகவும் மோசமான அளவில் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். அவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எழுதியவை, பேசியவை அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களின் முன்னேற்றத்திற்காக தந்தை பெரியார் எப்படி பாடுபட்டார் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள். இறுதியாக, பெண்களின் முன்னேற்றத்திற்காக தொலைக்காட்சி ஊடகங்களையும், பத்திரிகை ஊடகங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெண்களின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு நாளும் அய்ந்து நிமிடங்களை அல்லது பத்து நிமிடங்களை தொலைக்காட்சிகள் ஒதுக்கிட வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *