கே: தமிழகத்தை தற்போது ஆள்வது 132 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அ.தி.மு.க.வா? அல்லது ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத பா.ஜ.க.வா? – -மா.கிருஷ்ணமூர்த்தி, வேலூர்
ப: நல்ல கேள்வி. இந்த சந்தேகம் _ இல்லை, உண்மை _ பரவலாக எங்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வெளிமாநிலங்களில்கூட உள்ளது. டெல்லியின் பொம்மலாட்டப்படி ஆடுகின்ற நிலை ஒருபுறம்; இங்குள்ள ஆளுநரின் ஆட்சி போன்ற செயல்கள் மறுபுறம். என்னா விநோதம் பாரு! எவ்வளவு ஜோக்கு பாரு! பாரு! என்று கேட்ட பாட்டு நினைவுக்கு வருகிறது! கே: அதிகாரத்தை துறப்பதே ஆன்மிக அரசியல் என்பது காந்தியடிகளின் கூற்று. ஆனால், இங்கு அதிகாரம் பெற ஆன்மீகம் பேசுகிறார்களே! அதிகாரத்தை துறப்பதே ஆன்மிக அரசியல் என்பது காந்தியடிகளின் கூற்று. ஆனால், இங்கு அதிகாரம் பெற ஆன்மீகம் பேசுகிறார்களே! – தீ.பழனிமுருகன், ராஜபாளையம்
ப: அதிகாரம் மட்டுமல்ல; இவ்வுலக வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாதது. ஆத்மா _ தமிழில் ஆன்மா. அது எப்படி அரசியலுக்குக் கருவியாகும். எதை வேண்டுமானாலும் சொல்லி விடுவது ஆன்மீக அரசியல் போலும். இரண்டும் நகைமுரண்கள் ஆகும்!
கே: காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும், விவசாய சங்க பிரதிநிதிகளையும் சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காமல் இருப்பது தமிழக மக்களை அவமதிக்கும் செயல் அல்லவா?
– -சீ. லட்சுமிபதி, தாம்பரம்
ப: நிச்சயமாக. 2019 வரை இது தமிழ்நாட்டு மக்களின் நினைவில் நின்றாக வேண்டும்.
கே: பிராமண சமூகத்தினருக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி அய்க்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன? ——-தே. கோவிந்தசாமி, தண்டையார்பேட்டை
ப: ஒரு புள்ளிவிவரம் எடுத்து அவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ் வழங்கட்டுமே! அதில் எத்தனைப் பிரிவுகள் அவர்கள் எத்தனை சதவிகிதம் வெளிப்படுத்தினால் நல்லது.
கே: காங்கிரஸ் – பி.ஜே.பி அல்லாத மூன்றாவது அணி அமைய வேண்டும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் தெரிவித்திருப்பது பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? – -இல.சங்கத்தமிழன், செங்கை
ப: மூன்றாவது அணிகளால் பொது எதிரியான பா.ஜ.க.தான் லாபம் அடையும். கூட்டணியாக இப்போது இல்லாமல், தேர்தல் உடன்பாடு வேலைத்திட்டம் கூறி அதை வைத்து அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வைத் தோற்கடிப்பதுதான் எளிது. வாய்ப்பு அதிகம். வாக்குகள் பிரிவது மோடி அரசுக்கு லாபமாகும். கே: தஞ்சை பெரியகோயிலில் பல்வேறு சிலைகள் களவுபோன பின்பும் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காப்பது ஏன்? – மா.திருவேங்கடம், ஓட்டேரி
ப: கடவுள் சக்தியின் மகிமை இது! 50, 60 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாகவும் இருக்கிறதே! அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், அன்றைய அரசுகள் எல்லாம் பற்றி விசாரிக்கப்பட வேண்டும்.
கே: நாட்டில் வகுப்புவாதத்தை ஒடுக்க இடதுசாரிகள் ஒன்றிணைவதுதான் தீர்வு என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ள நிலையில் மார்க்சிஸ்ட்டுகள் மாறுபடுவது சரியா?
– -வா. சீதாராமன், கடலூர்
ப: சரியல்ல; தங்கள் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்வதே நல்லது. அதுவும் திரிபுரா தோல்விக்குப் பின்.
கே: பெரும் தொழில்புரியும் அதிபர்கள் மோடி சாம்ராஜ்யத்தில் வங்கிகளில் பல லட்சம் கோடி பெற்று வெளிநாடுகளுக்கு தப்பி ஓடி ஒளிவது நேர்மையான ஆட்சியின் அடையாளமா? – -இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
ப: சிணீலீறீமீ மீநீஷீஸீஷீனீஹ் – கையில், பையில் பணம் வைத்திருக்காதீர்கள். வங்கியில் போடுங்கள் என்ற மோடியின் திட்டத்தினால் பலன் அடைந்தவர்கள் மல்லய்யாக்களும், நீரவ் மோடிகளும் மற்ற வெளிநாட்டு ஓடிகளும்தான் என்பது இதன் மூலம் தெளிவாகிறது! பாரதத் திருநாடா? பாதகத் திருடர் நாடா? கே: தமிழ்நாட்டில் இந்துத்துவா சக்திகள் ஆன்மீக அரசியல் என்று நாடகம் ஆடுகிறது. நாளை என்ன நடக்கும்? – அ.காஜாமைதீன், பெரியகலையம்புத்தூர்
ப: மக்கள் விழிப்போடு இருந்தால், இந்த புதிய படம் சில நாள் மட்டும் ஓடி பெட்டிக்குள் சென்றுவிடும்.
கே: ஜாதி ஆணவக்கொலைகளை பிர்மாவின் காலில் பிறந்த சூத்திரத் தமிழன்தானே செய்கிறான்? முகத்தில் பிறந்த பார்ப்பான் செய்வதில்லையே ஏன்?
– சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை
ப: அடுக்குமுறை ஜாதி அமைப்பின் நோக்கமும் செயலுமே அதற்கு வித்து. பார்ப்பனர்கள் அதிலும் புத்திசாலிகள். வரதட்சணை மிச்சம். வரன்தேடி விணீக்ஷீவீனீஷீஸீவீணீறீ விளம்பரக் கடைகளுக்கு அலைச்சலும் இல்லை என்ற மன நிம்மதியே. வெளியில் தங்களை சார்ந்தோர் திருப்திக்கு ஒரு நாடக எதிர்ப்பு. அதுவும் சில நேரங்களில் மட்டும்.