ஒரு மவுன கொலையாளிஉலகம் முழுவதும் 3,10,00,000 மூன்று கோடியே 10 லட்சம் பேர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்த மக்கட் தொகையில் 2.7 சதவீதம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட தருணம் வந்துவிட்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. துக்க நிலையில் இருப்பதை மன அழுத்த நிலை என குழப்பிக் கொள்ளக் கூடாது. விருப்பமில்லாத நிகழ்வுகள் நிகழ்கின்றபோது துக்கம் ஏற்படுகிறது. இது சிறிது காலத்தில் மாறி இயல்பு நிலை திரும்பிவிடும். ஆனால், மன அழுத்தம் (ஞிமீஜீக்ஷீமீssவீஷீஸீ) என்பது சிந்தனை, உணர்வுகள், நடத்தைகள் ஆகியவற்றை நிரந்தரமாக பாதிப்புக்குள்ளாகின்ற நிலையாகும். ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
இந்தியாவில் இந்நோய்க்கான சிகிச்சைக்குப் போதுமான கட்டமைப்புகள் உருவாக்குவதில் இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எடுத்துக்காட்டாக மும்பையின் மக்கட்தொகை 2 கோடியே 10 லட்சம். ஆனால் அங்கு 300 மனநோய் மருத்துவர்களே உள்ளனர்.
அதாவது 6 லட்சத்து 50 ஆயிரம் மக்கட்தொகைக்கு ஒரு மனநல மருத்துவர் என்ற விகிதம். மும்பையிலேயே இந்த நிலை என்றால் மற்ற நகரங்களின் நிலை இன்னும் கவலைக்குரியதே. மக்கட்தொகையில் மனநோயாளிகள் 2.7% என்று உள்ளது. அவர்களுக்கான மருத்துவர்கள் சதவீதம் 0.0015 என்று உள்ளது. இது கவலையளிக்கக் கூடிய நிலைதானே!
தரவு: டெக்கான் கிரானிக்கல், 5.2.2017
Leave a Reply