தேன் பற்றி -தேனான செய்திகள்! – 2

மார்ச் 01-15

ஓர் இளநீரில் ஒரு துண்டு இஞ்சியை நசுக்கிப் போடவேண்டும். அதில் மூன்று டேபிள்ஸ்பூன் தேன், ஒரு எலுமிச்சையின் சாறு சேர்த்து ஒரு மணி நேரம் கழித்து (காலையில்) கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்து ருசித்துக் குடிக்க வேண்டும். இதை எல்லா வயதினரும் தொடர்ந்து குடித்து வந்தால் எல்லா நோய்களின் தீவிரமும் குறையும்.

இளமையுடன் இருக்க விரும்புபவர்கள் தினமும் சுத்தமான தேனை அருந்த வேண்டும். 40 வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாக தேன் அருந்தி வரவேண்டும். ஒரு டீஸ்பூன் தேனைச் சாப்பிட்டால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்படையும். சிலருக்கு கை, கால் மற்றும்  விரல்களில் நடுக்கம் இருக்கும். அப்போது ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து குடித்து வந்தால் பிரச்னை நீங்கும்.

படுத்த படுக்கையில் கிடப்பவர்கள் பாலுடன் சிறிது தேன் கலந்து குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்படும். அத்துடன் சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்குவார்கள். இரும்பு, தாமிரம், மாங்கனீஸ், பொட்டாசியம் போன்ற சத்துகள் இருப்பதால் ரத்தம் விருத்தியாகும்.

உடல் பருமன் குறைக்கவும், கொழுப்பைக் கரைக்கவும், சக்தியை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. சூடான அல்லது வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, அரை டீஸ்பூன் தேன் சேர்த்துக் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் காலப்போக்கில் எடை குறையத் தொடங்கும்.

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் ஆல்ஃப்ரெட். 120 கிலோ உடல் எடையுடன் மிகவும் சிரமப்பட்ட அவர் தனது எடையைக் குறைக்க பல்வேறு சிகிச்சைகள் செய்தும் பலனில்லை. அப்போது வெறும் தேனை மட்டுமே சாப்பிட்டுத் தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைக் கூட்டுவதுடன் நோயாளிகளின் எடையை அதிகரிக்கவும் தேன் உதவும். ஒரு டீஸ்பூன் தேனுடன் அதே அளவு இஞ்சிச் சாறு சேர்த்துக் காலை நேரத்தில் சாப்பிட்டுவந்தால், ரத்தம் சுத்திகரிக்கப்படும்; ரத்தம் விருத்தியாகும். உடலுக்கு ஓர் எரிபொருளைப் போல் சக்தி தருவதில் தேனைவிடச் சிறந்தது வேறு எதுவும்  இல்லை.

சளி, கோழையை அகற்றுவதுடன் இருமலையும் நி-றுத்தக்கூடியது. தேன், இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை நீங்கும். ஒரு டீஸ்பூன் தேனுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்து வெதுவெதுப்பான நீருடன் கலந்து குடித்துவந்தால் சளி விலகும். ஆடாதொடா இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்தால் நெஞ்சுச்சளி கரையும்.

துளசிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, தொண்டை வீக்கம், பிராங்கைட்டிஸ் (Bronchitis) எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவை சரியாகும். வறட்டு இருமலுக்கும் தேன் சிறந்த தீர்வு தரும். நெல்லிக்காய்களை சிறு சிறு துண்டுகளாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாள்கள் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும். அதில் ஒரு டீஸ்பூன் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

வயிற்றுவலியின்போது தொப்புளைச் சுற்றிலும் தேனைத் தடவிவந்தால் வலி நீங்கும். அல்சர் என்னும் வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் சாப்பாட்டுக்கு முன் இரண்டு கரண்டி தேனைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் அதன் தீவிரம் குறையும்.

காய்ச்சலின்போது உணவு உட்கொள்ள முடியாது. அப்போது வெறும் தேனை மட்டும் சாப்பிட்டு ஊட்டம் பெறலாம். குறிப்பாக டைபாய்டு, நிமோனியா காய்ச்சலின்போது தேன் சாப்பிடுவது சிறந்தது. ஒரு டீஸ்பூன் நிலவேம்பு சூரணத்தை ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அதில் சிறிது தேன் சேர்த்து காலை, மாலை வேளைகளில் குடித்துவந்தால் காய்ச்சல் குணமாகும்.

தேனில் உள்ள சர்க்கரை ஏற்கனவே செரிமானமான நிலையில் இருப்பதால் நாக்கிலேயே அதன் சத்தை உடல் உறிஞ்சிக்கொள்கிறது. செரிமான மண்டலங்கள், உடல் உறுப்புகளைத் தொந்தரவு செய்யாதது என்பதால் நோய் தீவிரமாக இருக்கும் நோயாளிகளுக்குத் தேன் மிகச் சிறந்த உணவு.
இதயம், கல்லீரல் தொடர்பான நோய்களுக்குத் தேன் சிறந்த மருந்து, தேனுடன் பால், எலுமிச்சைப் பழச்சாறு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும்; பித்தநீர்த் தொந்தரவு குறையும். மாதுளம் பழச் சாறுடன், சிறிது தேன் சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வந்தால் இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்ளலாம்.

இதய நோய் பாதிக்காமல் இருக்க வேண்டுமானால், தினமும் காலை வெதுவெதுப்பான நீருடன் தேன் கலந்து குடித்துவர வேண்டும். இதனால் தேனில் உள்ள ஃப்ளேவோனாய்டு (Flavonoid), ஆன்டி ஆக்ஸிடன்ட் (Antioxidant) போன்றவை இதய நோயின் தாக்குதலில் இருந்துப் பாதுகாக்கும்.

மூட்டுவலி உள்ள இடத்தில் தேனை நன்றாகத் தேய்த்துவிட்டால் வலி விலகும். அத்துடன் எந்த உணவு உண்டாலும் அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் மூட்டுகளில் வலி வராது; மூட்டுகளில் தேய்மானமும் ஏற்படாது. கருஞ்சீரகத்தை நீர்விட்டுக் காய்ச்சி அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் கீல்வாதம் சரியாகும்.

பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டிருப்பதால், வயிற்றுப் போக்கை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது தேன். இது லேசான மலமிளக்கியாகவும் செயல்படுகிறது. ஒரு டேபிள்ஸ்பூன் தேனை இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னர் உண்டு வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.

குழந்தை இல்லாத பெண்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் தேன் சாப்பிட்டு வந்தால், கருத்தரிப்பதில் உள்ள தடைகள் நீங்கும்.

கண் நோய் தொடர்பான மருந்துகளிலும் தேன் சேர்க்கப்படுகிறது. தேனுடன் வெங்காயச் சாறு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

இதனால் செரிமான சக்தி குறைந்தவர்கள் கூட இதைச் சாப்பிடலாம். மிதமிஞ்சிய இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்குப் பக்கவிளைவை ஏற்படுத்தாதது இதன் சிறப்பு.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *