2017ஆம் ஆண்டில் நடந்த ரயில் விபத்துகள்

பிப்ரவரி 16-28

 

 

¨           ஜனவரி 21இல் ஜக்தல்பூர் – புவனேஸ்வர் ஹிராகண்ட் எக்ஸ்பிரஸ் கென்னேடு விஜியநகரம் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 41 பயணிகள் இறந்தனர். 68 பயணிகள் காயமடைந்தனர்.

¨           மார்ச் 7இல் போபால்-உஜ்ஜயினி பயணிகள் ரயில் ஜாப்ரி ரயில் நிலையத்தில் நின்றபோது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 10 பயணிகள் காயமடைந்தனர்.

¨           மார்ச் 30இல் மஹாகௌசல் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் உத்தரப்பிரதேசத்தின் ‘குல்பார்’ ரயில்நிலையம் அருகில் தடம் புரண்டபோது 52 பயணிகள் காயமடைந்தனர். தண்ட வாளங்கள் இணைப்புகளில் மேற்கொள்ளப் பட்ட பற்றவைப்பு வேலைகளின் குறைபாட்டால் இந்த விபத்து ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

¨           ஏப்ரல் 9இல் ஒரு சரக்கு ரயில் ஹவுரா-கரக்பூர் செக்ஷனில் மதுபூர்-ஜக்பூர் இடையே தடம் புரண்டது.

¨           ஏப்ரல் 15 மீரட்-லக்னவ் இராஜதானி எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் ராம்பூர் அருகே தடம் புரண்டு 24 பயணிகள் காயமடைந்தனர்.

¨           ஜூலை 18இல் மேற்கு வங்கத்தில் சீல்டா ரயில் முனையத்தில் ஒரு சபர்பன் ரயில் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

¨           ஆகஸ்டு 19 உத்தரப்பிரதேசத்தில் பூரி-அரித்துவார் கலிங்கா-உத்கல் எகஸ்பிரஸ் வண்டி தடம்புரண்டு 23 பயணிகள் மாண்டனர். 97 பேர் காயமடைந்தனர்.

¨           ஆகஸ்டு 23 பைபியாட் எக்ஸ்பிரஸ் பாபா-அச்சல்டா ஸ்டேஷன்களுக்கிடையில் தடம் புரண்டதால் 100 பயணிகள் காயமடைந்தனர்.

¨           நவம்பர் 23 உத்தரப்பிரதேசத்தில் சித்ரகூட் அருகே வாஸ்கோடாகாமா-பாட்னா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் 3 பயணிகள் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்தனர்.

¨           நவம்பர் 24இல் ஒரு சரக்கு ரயில் கோரக்பூர் ரகுநாத்பூர் இடையே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *