கடவுளை மறைத்து
உயர்கின்றன
காணிக்கை உண்டியல்கள்
கண்களை மறைக்கிறது
வெள்ளிக் கண்ணடக்கம்
காட்சி தெரியுமா கடவுளுக்கு?
ஓங்கி ஒலியெழுப்பும் தாரை
தப்பட்டைகள்
ஊர்வலம் கிளம்பும் உற்சவர்
காதுகளை மறைக்கும் பூ மாலைகள்
நிறுத்தப்பட்டன செயற்கை
குளிரூட்டல்கள்
நடை சார்த்தப்பட்டது
கருவறைப் புழுக்கத்தில் கடவுள்
வேண்டுதல்கள் கிறுக்கல்கள்
வண்ணம் இழந்தது
கோயில் சுவர்
கலக்கத்தில் கடவுள்
பக்தர்களின் வேண்டுதல்கள்
எதற்குச் செவிமடுப்பது?
கருவறை திரும்பமுடியாமல்
தெருவில் உற்சவர்
பக்தர்களின் நெரிசல்
குருட்டுக் கணவன்
செயற்கைக் குருடி காந்தாரி
மூட பதிபக்தி
நூறு சோதனைக் குழாயில்
காந்தாரியின் கரு
கௌரவர்கள்
பாற்கடலில் திருமால்
பக்தியில் தாய்
பசியில் மழலை
அருண்மொழித் தேவனை
ராஜராஜனாக்கியது
தமிழுள் நுழைந்த ஆரியம்
பார்வதியின் அழுக்கு
மகனாய்
விநாயகன்
பூவுலகில் நின்று
உலகளந்தானாம்
திரிவிக்ரமன்
நிலவை விழுங்குதாம்
பாம்பு
ஆரியரின் அழகுப் பொய்
எங்கிருந்து பார்த்தாள்?
எங்கிருந்து காட்டினான்?
வாயில் பூவுலகம்!
சுண்டுவிரல் தாங்கிய மலை
தூக்கி வைத்தது
யார் கண்ணா?
– வெ.கலிவரதன்
Leave a Reply