செத்த பாபாவை விமர்சித்தேன் என்று என் மீது வெறுப்புமிழ்ந்த வாய்கள் சொல்லட்டும், செத்த பின் அறையில் இருந்த எல்லாமும் கணக்கில் இருந்ததா?
கணக்கில் வராதது ஊழல்/கறுப்பு இல்லையா? இதையும் `அன்னாகாவடிக்காரர்` மெழுகுவத்தியோடு கண்டிப்பார்களா?
ஆர்.கே.ருத்ரன் மனநல மருத்துவர் 19.8.2011 இரவு 10:05 மணி
பிரதமர் அல்லது ராகுல் காந்தியிடம் மட்டுமே பேசுவாராம் அன்னா ஹசாரே. #பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா? …
கவின் மலர் 23.8.2011 பகல் 11:00 மணி
சேட்டு கும்பல் கைகளில்
மூவர்ணக்கொடி…
வெய்யிலே படாத சிவப்புத்தோல்
பேசுகிறது
அத்து வந்து அன்னா அசாரே ஆண்டி கரப்சன் மூவ்மண்டுக்கு
ஆதரவு தரோம்…!
அடி செருப்பாலே
அடகுக் கடையில்
எத்துனை தமிழர்களின்
தாலி அறுத்து இருப்பீர்கள்…
ஆண்டி கரப்சனா…
மணிவர்மா 21.8.2011 மாலை 05:40 மணி
முதலில் திருப்பதியிலும், பத்மநாப சுவாமி கோவிலிலும் மக்கள் கொட்டும் பணத்தை அரசுடமை ஆக்க போராடுங்கள். கோவிலுக்கு எதுக்கு அவ்வளவு பணம்? கோவில் நடத்த தேவையான பணம் போக மீதியை அரசு எடுத்துக்கொள்ள வேண்டும்.
வரி கட்டாதவன் அத்தனை பேரும் அங்கதான் கொண்டு போய் கொட்றான்! உள்நாட்டுல இருக்க குப்பையெல்லாம் அப்படியே விட்டுட்டு ஸ்விஸ் பேங்க்ல இருந்து ஆரம்பிச்சா என்ன அர்த்தம்? ஸ்ட்ரெயிட்டா ஹீரோன்னா எப்படி? :-
டான் அசோக் 22.8.2011 மாலை 08:41 மணி
பத்மநாப சாமி கோயிலின் ஆறாவது அறையைத் திறந்தால் திறப்பவர்களின் வம்சமே அழிந்து விடும் என்று தேவபிரசன்னத்தில் வந்துள்ளது- – மலையாள மாந்திரீகர்கள் தகவல்.
கடவுளுக்கு எதுக்குத் தங்கமும் வைரமும். இந்த உலகமே அவரோடதுதானேன்னு கடவுள் நம்பிக்கை உள்ள ஒருத்தர்கூட யோசிக்க மாட்டாங்களா?
மனுஷ்ய புத்ரன் 11.8.2011 மாலை 9.15
முழுமையான சுதந்திரம் இதுவரை கிடைத்துவிட்டதா என்றால் இல்லை. இன்று தமிழ்நாட்டில் ஒரிசா, பீகார், போன்ற மாநிலத்தவர் பலர் இங்கே வேலையில் இருக்கிறார்கள், எந்த வித அச்சுறுத்தலும் இல்லாமல் வாழ்கிறார்கள்.
ஆனால் ஒரு தமிழன் கேரளாவில் கூட ஒரு சுதந்திரமாய் வேலையோ அல்லது தொழிலோ செய்து பிழைக்க முடியுமா?. முன்னேற முடியுமா ???.
சுட்டுக்கொல்லப்பட்ட மற்றும் உயிர் பாதுகாப்பற்ற கடலோர மீனவர்களின் குடும்பங்கள் இந்த சுதந்திரதினத்தைக் கொண்டாடுமா….
சதீசு குமார் இ.வே. 22.8.2011 காலை 11:04
ஆணோ பெண்ணோ அழகைப் பார்த்து கல்யாணம் பண்ணுவது .
Paint க்காக வீட்டை வாங்குவதுபோன்றது .
-சொன்னவர் யாரென்று தெரியவில்லை.
ரா. அசோக் 10.8.2011 பகல் 10:03 மணி
1917ல் வெளிவந்த ஒரு பத்திரிகைச் செய்தி! யுவகிருஷ்ணா 17.8.2011 மாலை 04:33
மணி
தந்தை பெரியார் தமிழினத்தை எவ்வளவு தூரம் அழைத்து வந்துள்ளார் என்பதற்கு இது ஒரு சின்ன உதாரணம்..
அ. வெற்றிவேல் 17.8.2011 மாலை 05:07 மணி
ட்விட்டர் :
கிரண்பேடி : அன்னாவின் உடல்நிலைக்காக பிரார்த்தியுங்கள். அவர் இக்கட்டான நிலையை அடைந்துகொண்டிருக்கிறார்.
இதற்கு, கஃபிர் நல்கண்ட்வார் அளித்த பதில்: பிரார்த்தனையைவிட உணவு நன்கு வேலை செய்யும். என்னை நம்புங்கள்.