சென்னை பெரியார் திடலில் ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு சார்பில் 10.02.2018 அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கி, திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல் கூட்டத்தில் எட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இரண்டாம் (கல்வி) ஆண்டாக ‘நீட்’ தேர்வைத் திணிக்கும் மத்திய அரசுக்கு வன்மையான கண்டனம்.
தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் அரசுக்குரிய இடங்களுக்கும்…

எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் (திருத்த) சட்டம், 2016 பிரிவு 10(ஞி)யோ, உச்சநீதிமன்றமோ விலக்கு அளிக்காத போதும், மத்திய அரசு அவற்றுக்கு ‘நீட்’ பொருந்தாது என்று அறிவித்திருப்பதை சுட்டிக் காட்டுவ தோடு, மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு தரப்படும் அதே விதிவிலக்கை, முறைப்படி சட்டமியற்றி விலக்குக் கோரும் தமிழ்நாடு அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் தனியார் கல்லூரிகளில் அரசுக்குரிய இடங்களுக்கும் தராதது ஏன்? என்பது மிக முக்கியமான கேள்வியாகும்.
இந்த ஆண்டிலாவது காலந்தாழ்த்தாமல், தமிழக சட்டப் பேரவை நிறைவேற்றி அனுப்பிய ‘நீட்’ தேர்விலிருந்து விலக்குக் கோரும் சட்ட முன்வரைவுகளுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மாநில அரசு உரிய அழுத்தம் தர வேண்டும் எனவும், இதற்கென அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கொண்ட குழுவினை அமைத்து, மத்திய அரசை வலியுறுத்த தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
‘நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசு தரவிருப்பதாகச் சொல்லும் பயிற்சிகள், அரசால் சொல்லப்படும் பலனைத் தராது.
எனவே, முழு மூச்சாக தமிழக அரசு ‘நீட்’டை ஒழித்துக் கட்டும் சட்டப் பூர்வ நடவடிக்கைகளிலும், அரசியல் சட்டம் தந்திருக்கும் மாநில உரிமையை நிலைநாட்டும் முயற்சியிலும் ஈடுபட வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
கல்லூரி, –பள்ளிகளின் முன்பு தொடர் வாயில் கூட்டங்களை நடத்துவதெனவும், விடுதிகள் தோறும் சென்று மாணவர்களைச் சந்திப்பது எனவும், மாவட்டத் தலைநகரங்களில் கருத்தரங்குகளை – தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்துவது எனவும், கையெழுத்து இயக்கத்தையும் நடத்துவது எனவும், துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியா முழுமையும் உள்ள அய்.அய்.டி.களில் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளுக்கும் இருக்கைகளை உருவாக்க மத்திய அரசு முன்வரவேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
சமூகநீதிப் பாதுகாப்பிற்கான பேரவை (அனைத்துக் கட்சிகள் சமூக அமைப்புகளின் கூட்டமைப்பு) என்ற ஓர் அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்படுகிறது. மாணவர் அமைப்புகளின் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைத்துச் செயல்படும். இக்கூட்டத்திற்கு வர இயலாத அமைப்புகளையும் இதில் இணைத்துக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. இதன் ஒருங்கிணைப்பாளர்
பிரின்சு என்னாரெசு பெரியார். அனைத்துக் கட்சி சமூக அமைப்புகளின் பிரதி நிதிகள் அடங்கிய செயற்பாட்டுக் குழு அமைக்கப்படும்.
பேருந்து கட்டண உயர்வினை எதிர்த்துப் போராடிய மாணவர்கள்மீதும், ‘நீட்’டுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீதும் போடப்பட்ட வழக்கு களைத் திரும்பப் பெறவேண்டும் என்றும்,
கல்வி நிறுவனங்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்களை, மீண்டும் கல்லூரிக்குச் செல்ல அனுமதிக்கவேண்டும் என்றும் இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.
திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் 27.1.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட கீழ்க்கண்ட தீர்மானங் களையும் இக்கூட்டம் வழிமொழிந்தது.
கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றோர்
திராவிடர் கழகம், தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை, மாணவர் பெருமன்றம், கேம்பஸ் பிரண்ட் ஆப் இந்தியா, அச்சமில்லை மாணவர்கள் அமைப்பு, மக்கள் அதிகாரம், மறுமலர்ச்சி மாணவர் மன்றம், முசுலீம் மாணவர் கூட்டமைப்பு, சமூகநீதி இயக்கம், ஏஅய்எஸ்எப் ஆகியவற்றின் மாணவர் அமைப்புகள்.
Normal 0 false false false EN-US X-NONE X-NONE MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:”Table Normal”; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:””; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:”Calibri”,”sans-serif”; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:”Times New Roman”; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}
‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக் கோரி அனைத்துக் கட்சி மாணவர் அமைப்புகளின் கலந்துரையாடல்