“வாழ்க்கை ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் இங்கே நடிகர்கள்’’ என்ற வில்லியம் ஷேக்ஸ்பியரின் வார்த்தைகளோடு தொடங்குகிறது இக்குறும்படம்.
திரைத்துறை என்பது ஒரு கனவுத் தொழிற்சாலை. எல்லோராலும் அந்தக் கனவை நினைவாக்கிட முடிவதில்லை. ஆகவே, மிகுந்த எச்சரிக்கையுடனேயே அதை அணுக வேண்டும் என்று எச்சரிக்கிறது இந்தக் குறும்படம். திரைத்துறையைப் பொறுத்தவரையில், வெற்றிபெற்ற சிலரே கண்ணுக்குத் தெரிகின்றனர். தோல்வியடைந்தவர்கள் மக்கள் பார்வைக்கே வருவதில்லை. அப்படி தோல்வியடைந்த ஒரு பெண்ணைப் பார்த்து, புதிதாக வர எண்ணும் ஒரு பெண் இதுபோன்று தானும் ஆகிவிட்டால் என்ன செய்வது என்று தனது கருத்தை மறுபரிசீலனை செய்ய முற்படுகிறார்.
திரைத்துறையின் இயல்பை கலையம்சத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் பாஸ்கர். ‘டேக் இட் ஈசி’ -_ நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளனர். மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் கதாபாத்திரம் நெஞ்சைத் தொடுகிறது. இக்குறும்படம் சீஷீutuதீமீ-ல் காணலாம்.
– உடுமலை