Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வாசகர் கடிதம்

‘உண்மை’ மாத இதழ் ஜனவரி 16_31, 2018இல் முதல் அட்டையில் ‘பொங்கல் விழா’ சிறப்பு மலராய் அமைந்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சித் தரக்கூடியதாயிருந்தது. அதன் உள்பக்கம் ஆரியர் மக்களின் திருமண முறையின்  ஒழுக்கமும் டாக்டர் அம்பேத்கர் விளக்கமும், மகாபாரதத்தில், ஹரிவம்சம் பற்றியும், தேவர்கள் செய்யும் லீலையைப் பற்றியும், இம்மூடத்தனத்தைவிட்டு பகுத்தறிவோடு செயல்படவும், சுயமரியாதைத் திருமணம் பற்றியும், ஜனவரி 5,6,7இல் நடந்த நாத்திகர் மாநாட்டைப் பற்றி விளக்கம் தரப்பட்டதும், அய்யா எழுத்தாளர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் திருமணம் பற்றியும், பாவேந்தர், தந்தை பெரியார் ஆகியோரின் ‘பொங்கல்’ பற்றிய சிறந்த கருத்தையும், அனைவரின் அய்யத்தையும் போக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘கேள்வி பதிலும்’ சிறப்பானவை. இவ்விதம் தமிழர்களுக்கு அறிவை எழுச்சியுறச் செய்யும் ‘உண்மை’ இதழின் தொண்டு வாழ்க!

இப்படிக்கு,

கலைமாமணி வி.பி.மாணிக்கம்,
நெல்லித்தோப்பு, புதுச்சேரி-5