தமிழரின் தொன்மையைத் தேடி கடல்வழியே ஒரு பயணம்

ஜனவரி 16-31

தமிழர்களின் தொன்மையைத் தேடி நில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  முதன்முறையாக ஒருங்கிணைந்த கடல் ஆய்வு மேற்கொண்டு தமிழர் கடலில் இழந்த நிலம்களையும் மற்றும் உலகெங்கும் பரவிய தகவல்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் பாலசுப்ரமணியம் பி பாசிட்டிவ்.
கடலைப் பயன்படுத்தி நாகரிகத்தையும் தொழில்வளத்தையும் பெருக்கிய தமிழரின் வரலாற்றை நிகழ்கால ஆதாரங்களோடு அறிவியல்பூர்வமாக நிரூபிக்கும் அரிய பணியைச் செய்துவரும் ஒரிசா பாலுவை உண்மை பொங்கல் சிறப்பிதழுக்காகச் சந்தித்தோம்.
திருச்சி உறையூரில் பிறந்தேன். 1989 இல் பணியின் காரணமாக ஒரிசா சென்றேன்.
திருப்புமுனை
1999 இல் தமிழ்ச்சங்கத்திற்காக ஆண்டு மலர்  போட்டார்கள்.  அதிலிருந்த ஒரு கட்டுரை என் வாழ்க்கையை

மாற்றியது.  சுந்தரராஜன் என்பவர் ஒரிசாவிலுள்ள தமிழர்களைப்பற்றி எழுதி, இதை ஏன் மத்தவங்க செய்யக்கூடாது என்றார்.  அப்ப, அதை நான் படிச்சிட்டு, தமிழ் ஆதாரங்களைத் தேடி அலைந்தேன்.  கல்வெட்டுச் செய்திகள்

ஒரிசாவில் கலிங்க மன்னன் காரவேலன் கல்வெட்டு அத்திக்கும்பா கல்வெட்டு, யானைக் குகைக் கல்வெட்டுப் பெயர்களை, கந்தகிரி மற்றும் உதயகிரினு சொல்வாங்க.  அந்த மலையின் பழைய பெயர் குமரி பருவதம், குமார பருவதம்னு ஆய்வில் தெரிந்தது.  அதை ஆண்ட மன்னன் சேதி நாட்டவனாயினும், அடிப்படையில் கந்தா என்று சொல்லக்கூடிய தமிழ் பூர்வ பழங்குடியைச் சேர்ந்தவன் என்பதும் தெரிந்தது.  அவனது கல்வெட்டுகள் தமிழருடைய பழைமையை நிலைநாட்டக்கூடியவை.
சிந்தனையைத் தூண்டிய செய்தி
4 செய்திகள் காணப்படுகின்றன.  அவற்றுள் 1. கடல்கோளால் அழிந்துபோன நகரத்தைச் சரிசெய்தது. ஆவா  என்ற மன்னனை அழித்து அவனது இடத்தை கழுதையால் உழுவது.  ஆவா  என்ற பெயர் இன்றும் மினிகாய்  தீவில் வழக்கத்தில் உள்ளது.  அத்திரி, ஆவா  என்ற 2 பழம்குடிகள்  இன்றும் இருக்கிறார்கள்  .  ஆவா  என்பதற்குக் குடித்தலைவன் என்று பெயர். 1300 வருடங்கள் ஒற்றுமையாக இருந்த திரமித கூட்டணி தன்னுடைய தேசத்துக்கு ஆபத்து என்று சொல்லிவிட்டு, அவன் கொடியை நீக்கிய செய்தியும் பாண்டிய மன்னனுக்குப் பரிசாகக் கொடுத்த செய்தியும் கல்வெட்டில் இருந்தது. இது என் சிந்தனையைத் தூண்டியது.
கல்வெட்டாளர்களின் கருத்து
1300 வருடங்கள் என்று இருந்ததை அப்போது இருந்த கல்வெட்டாளர்கள் 113 வருடமா மாத்தினாங்க.  அதற்கு அவர்கள் சொன்ன காரணம், தமிழகத்தில் தொன்மை கிடையாது.  சந்திரகுப்த மவுரியர், அதோட கணக்கு வச்சுத்தான் 113 என சுருக்கினாங்க என்றது எனக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. இந்தக் கல்வெட்டுச் செய்தியில் ஆராய்ச்சி செய்தபோது, தமிழகத்தில் கிடைத்த பழைய கல்வெட்டு 4 ஆம் நூற்றாண்டு.  பழைய காப்பர் பிளேட் 5 ஆம் நூற்றாண்டு என்று கல்வெட்டாளர்கள் சொல்லி நம் வரலாற்றை 2000,வருடத்திற்குள் ஒதுக்குகிற பிரமையினை எனக்கு உருவாக்கினார்கள்.
தமிழ்ப் பழங்குடிகள்
அந்த நேரத்தில் குடியம் என்ற ஒரு மலைக்குகையில் 5 லட்சம் வருடத்திற்கு முன் தமிழர் வாழ்ந்த செய்தி நிறைய வந்தது.  இந்நிலையில், ஒரிசாவிலுள்ள 14 தமிழ்ப் பழங்குடியினர் ஆய்வு, 30 தமிழ்க் கல்வெட்டுகள் ஆய்வு , 2 கடற்கரைப் பிரிவினர் _ நுலயா  எனப்படும் சங்ககால நுழையர், கேவ்டா  எனும் மீனவர்_கயல் வர்த்தகர் என்ற பெயர் கைவர்த்த எனமாறி கேவ்டா  என்று வழங்கப்பட்டுள்ளது.  கந்தா, குயி, குவி, சவரா, குளிந்தா, குடியா, கிசான், ஓரான், குறுக்  போன்றோர் பழங்குடியினர்.  இன்றும், இவர்களது வழக்குச் சொற்களில் தமிழ்ச் சொற்கள் உள்ளன.
கடலாய்வுக்கு வித்திட்டவர்
2007 இல் ஒரிசாவின் மாவட்ட ஆட்சியரான சந்தான கோபாலன் அவர்களைச் சந்தித்த போது,  சேட்டிலைட் ட்டால குமரிக்குக் கீழே நில நீட்சி தனியா தெரியுது.  ஏன் கிளைகளை ஆய்வு செய்றீங்க?  கடலாய்வு நீங்க ஏன் பண்ணக்கூடாது?  மூலம், தமிழனின் வேரை எடுத்துடலாம்.  கிளைகளில் தமிழனின் வரலாற்றைத் தேடிட்டிருக்கீங்க என்றார்.
நல்லசாமி பிள்ளை
குமரிக்கண்டம், லெமூரியாபற்றி 1860 இல் ஹெக்கேல், ச்லட்டேர் பிளின்ட் போர்டு பேசியது பரபரப்பாக இருந்தது.  மேடம் ப்லாச்த்கி   என்பவர் லெமூரியா என்ற கான்செப்ட் கொண்டு வந்தார்.  மெக்லீன்   5 வருட கடலாய்வில், தமிழரின் தொன்மை லெமூரியாவில்தான் உள்ளது என்று சொன்ன தகவல்களை  நீதிபதி  நல்லசாமி பிள்ளை எடுத்து, 1898இல் முதல் செய்தியாக வெளியிட்டார்.  தமிழ் இலக்கியங்களில் சிலம்பு, மணிமேகலை, புறநானுறு ,கலித்தொகை, இறையனார் அகப்பொருளிலும் குறிப்புகள் உள்ளன.
மதுரைத் தமிழ்ச்சங்கம்
தமிழ்நாட்டு அறிஞர்கள் வேகமாகச் செயல்பட்டாலும் மதுரைத் தமிழ்ச் சங்கத்தினர் முதலில் செயல்படுத்தினர்.  முதல் எக்சிகியூட்டிவ் கமிட்டி மெம்பராக நல்லசாமி பிள்ளை இருந்தார்.  1916 இல் சென்னையில் பேசப்பட்டது.
குமரிக்கண்டம் என்ற சொல்லை பிரபலப்படுத்தியவர்
முதலில் அப்பாத்துரையார் 1941 இல்
அரசன் சண்முகனார், சோமசுந்தர பாரதி,சுப்ரமணியம் சாஸ்திரி  போன்ற பலர்  சொன்னாலும் தமிழரின் தாயகம் குமரி நிலம் பிரபலப்படுத்தியவர் பாவாணர் ஆவார்.
ஆராய்ச்சிக் கருத்துகள்
2004 _ 05 இல் சுமதி ராமசாமி என்பவர் தனது  என்ற நூலில் லெமூரியா பொய், ஹோட்டலுக்கு வேணா லெமூரியானு பெயர் வைக்கலாம்.  லெமூரியாவிலிருந்து குமரிக்கண்டம் எப்படி வந்தது என்பதை லெமூரியா டூ குமரி கால பெட்டகம் முறையில் என ஆய்வு பண்ணினார்கள்.  இதுவரை வந்த ஆவணங்களைத் தொகுத்துப் போட்டுட்டு லெமூரியாவும் குமரிக்கண்டமும் பொய், தமிழ் இலக்கியவாதிகளின் கற்பனை என முடித்தார்கள்.
சுகி. ஜெயகரன் என்ற நிலவியல் ஆய்வாளர் மண்ணியல் நோக்கில் மட்டும், நிலத்தை ஒட்டிய பகுதிமட்டும் மூழ்கியிருக்கலாம் என்றார்.
தப்பி வந்த மக்கள்
1860 _ 2007 வரை பேசினாலும் இந்தியப் பெருங்கடலில் இருக்கும் தமிழனின் பண்பாட்டினை நாம் கணக்கில் எடுக்கவில்லை.  குறிப்பாக, தென்புலத்தான் என வள்ளுவர் சொல்லியதற்கு இறந்த முன்னோர் என்றனர்.  ஏன் இது திருவள்ளுவர் வாழ்ந்த காலத்தில் கடலிலிருந்து தப்பி வந்த மக்களைச் சொல்லியிருக்கக் கூடாது என்று நான் நினைத்தேன்.  இன்று இலங்கையிலிருந்து வருபவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.  குமரிக்கண்டம் பேசிய யாரும் ஏன் கடலாய்வு செய்யவில்லை என்று தோன்றியது.
லெமூரியா
கன்னியாகுமரியிலிருந்த மீனவர்களைச் சந்தித்தபோது நமது தொன்மையினை இனங்கண்டு உணர முடிந்தது. கடலுக்குள் 8 கி.மீ. தூரத்திலிருந்த ஆடுமேய்ச்சான் பாறை, குகை, மூழ்கிய கோயில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1917 இல் ஆபிரகாம் பண்டிதர் வெளியிட்ட கருணாகசாகரம் எனும் நூலில் (பக் 27,28) லெமூரியாபற்றிய செய்தி உள்ளது.  ஹெச். ஏ. கிருஷ்ண பிள்ளையின் இரட்சணிய யாத்திரிகமும் பதிவு செய்துள்ளது.  இச்செய்திகள் உண்மையா என பலரிடம் கேட்டபோது முதலில் பொய் என்றனர்.  பிறகு மீனவர்களுடன் கலந்தாலோசித்த போது, திரிகோணப் பாறை எனப்படும் விவேகானந்தர் பாறையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் 36 மீ ஆழத்தில் 15000 சதுர அடியில் பழைய கால இடிபாடுடன் கூடிய கோயில் உள்ளது.  இதனை டாலமியும் சொல்லியுள்ளார்.  பின்பு, இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஆய்வு செய்தோம். இது வரை நான்கு இட்பாடுகள் உள்ள இடம்களையும் மற்றும் ஒரு தீவு மூழ்கி உள்ளதையும் கண்டு இருக்கிறேன்

தென்புலத்தான்
குமரிக் கண்டத்தினை ஆய்வு செய்யாமல் எப்படி பொய் என்று சொல்லமுடியும்.  இந்தியப் பெருங்கடலில் 2500 பி.சி. சிந்து சமவெளி காலத்திலிருந்து மக்கள் வந்தார்கள்.  எகிப்திலிருந்து அரசி வந்தார்கள்.  4 ஆம் நூற்றாண்டில் அரிஸ்டாட்டில், 6 ஆம் நூற்றாண்டில் பிதாகரஸ் வாழ்ந்தவர்கள். வடபகுதியில் இவ்வளவு நிலம் இருக்கும்போது தென்பகுதியில் ஏன் நிலம் இருக்கக்கூடாது( TERRA AUSTRALLIS- UNKNOWN SOUTH LAND ) என்ற ஆய்வு தோன்றியது.  அந்தக் காலத்தில்தான் திருவள்ளுவர்கூட தென்புலத்தான் என்ற வார்த்தையினை உபயோகப்படுத்தியிருக்க வேண்டும்.
இந்தியப் பெருங்கடல்
உடைந்த கப்பல் கதைகளில் எகிப்திலிருந்து  வந்த வணிகர்கள் இந்தய கடலில்  இருந்து பல பொருள்கள் எடுத்துச் சென்ற செய்திகளைப் படித்து ஆச்சரியப்பட்டு கடல் வணிகம், கப்பல்பற்றிய தகவல்களைத் திரட்டினேன்.  கடல் துறை, நிலவியல், வானியல், மானுடவியல் என 23 துறைகளாகப் பிரித்துப் பணியாற்றினேன்.
இயற்கையின் சீற்றத்தால் எப்படி இடம் மாறியுள்ளோம், நிலம் எவ்வளவு தொன்மையானது என்பதுபற்றி எனது ஆய்வு செல்கிறது
1863 மே 30 இல் சென்னை பல்லாவரத்தில் ராபர்ட் ப்ருசே   பூட் தொடர்ச்சியாக 30 வருட ஆராய்ச்சி செய்துள்ளார் கற்   கால மனிதர் வாழ்ந்த இடம் தென் மாநிலம் என்று தீர்மானமாகச் சொன்னார்.
கடலை, மலையை ஒட்டிய பகுதிகளில் குறைந்தபட்சம் 300 இடங்கள் கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள்.  தென்னிந்தியாவில் 100 இடங்கள் கிடைத்துள்ளன.  தமிழகத்தில்  மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று என்பதற்கு, கடல்தான் பதில் சொல்ல வேண்டும்.
மீன்பிடித்தளம்
கன்னியாகுமரியில் 4000 சதுரமைலில் 12,500 கி.மீ. நிலப்பரப்புள்ள வேட்கே   பேங்க் என்று இன்று அழைக்கப்படும் மீன்பிடி வளமுள்ள இடம் இருக்கிறது.   குமரியன் பேங்க் என்று முதலில் அழைக்க பட்டு பின்னர் wadge bank அதாவது சுறா பாறை என 1927 இல் பெயர் வைக்கப்பட்டது.  உப்பு, சங்கு, சிப்பி, ஆமை போன்ற நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.  20 மீன்பிடித் தளங்களில் முக்கியமானது.  இங்கு முன்னோர்கள் வாழ்ந்த இடம் இன்று பல் உயிர்  வாழும் இடமாக உள்ளது
மூழ்கிய தீவுகள்
நமது தொன்மை கடலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.  கன்னியாகுமரியில் 4 இடங்களின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  55 கி. மீட்டரில் மூழ்கிப்போன தீவு டாலமி மரிக்கேனி.  ரிமோட் சன்சிங் முறையில் இன்காட்டா மேப் அடிப்படையில் லட்சத் தீவை ஒட்டிய பகுதிகளில் 6 தீவுகள் மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது.  ஏலி கல்பேனி, பெருமாள் பர்ல் இந்தியப் பெருங்கடல் இலக்க  தீவு and மாலத்தீவுக்குக் கீழே  உள்ளது.  ஆய்வில், இது நிலமாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
இப்பொழுது இலங்கைக்கு கீழாக 450000 கிலோ மீட்டர் பரப்பு உள்ள நிலம் தாழ்ந்து இருப்பது கண்டு அடயாளம் காணப்பட்டு  மனிதர்கள் வாழ்ந்து உள்ளார்களா  என்று  ஆய்வு செய்து வருகிறேன்
பூமிக்குக் கீழே ஊர்
கன்னியாகுமரியில் கலிங்கராஜபுரம் என்ற ஊரில் 7 மீ ஆழத்தில் கோயில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.    ஆதிச்சன்புதூர் என்ற இடத்திலும் உவரி _ கணக்கன் குடியிருப்பு, சாயர்புரம், குதிரை மொழி ஆகியன தேரிகளாக இருந்த இடத்தில் கீழே ஆய்வு செய்தால் நிறைய தகவல்கள் கிடைக்கலாம்.
கடல்கோள், நாகரிகத்தையே அழிக்கும் சக்தியா என்ற கேள்வியினை, 2004 இல் ஏற்பட்ட சுனாமி நம்பவைத்தது. பூமியின் சுழற்சியும் அச்சு மாறுதலும்தான் கடல் நிலம் கொள்ளல், விடுபடலுக்கான காரணம் என்று பூமியின் சுழற்சியில் ஏற்படும் மாறுதல்கள் மூலமா ஆய்வுப்பூர்வமாக நிரூபித்தேன்.
தென்மாநிலங்களின் தனித்தன்மை
கொற்கை பின்வாங்கியது, பூம்புகார் எப்படி அழிந்தது என்பதையெல்லாம் நினைத்து ஆச்சரியப்படுவோம். பசுபிக் அட்லாண்டிக்கிற்கு வடக்கு, தெற்கு என இரு பக்கங்களைப் பார்க்கலாம்.  இந்தியப் பெருங்கடலுக்கு தெற்குப் பக்கம் மட்டுமே பார்க்க முடியும்.  ஒரு பக்கம் முழுக்க முழுக்க நிலம், இன்னொரு பக்கம் கடல்.  இதில், கன்னியாகுமரி, தென்மாநிலமே பார்த்திருக்கிறது.
ஆமைகளின் அதிசயத்தன்மை
1995 லிருந்து ஆமைகள்பற்றிய ஆராய்ச்சி செய்கிறேன்.  ஆமை பல ஆயிரம் மைல்கள் பயணம் செய்யக்கூடியது.  நடுப்பகுதியில் செல்லும்போது ஆமைகள் நீந்தாது.  நீரோட்டத்தில் மிதந்து கொண்டேதான் செல்லும்.  ஆமை முட்டையிட்ட இடத்தில்தான் அதன் சந்ததிகளும் முட்டையிட வரும்.  ஆமைகள் முட்டையிடும் 302 இடங்கள் தமிழ்ப்பெயர்களாக உள்ளன.
மேற்கு ஆஸ்திரேலியாவில் கூலன்தீவு, ஊர் தீவு, பப்பு நியூ கினியாவில்  களிமாண்டன்  கடற்கரை, நாள்மாடல் குமரி, குறள் கடற்கரை, குமரிக் கடற்கரை, குரல், இந்தோனேசியாவில் கலிமாந்தன், மெக்சிகோவில் தமிழிபாசு, என்று சொல்லிக்கொண்டே போகலாம்.  கடலூர் பழையாறையில் ஆமைகள் போகும் இடம் பர்மாவில் தமிழா என்ற பெயரில் இன்றும் உள்ளது.  ஆமைகள் இங்குவந்து முட்டையிட்டுச் செல்கின்றன.
தமிழனின் தனித்தன்மை  கடலின் நீரோட்டத்தைக் கண்டுபிடித்து தமிழக மீனவர்கள் எப்படி அடுத்த கடற்கரை இடத்திற்குப் போனார்கள்.  பொதுவாக, உலகத்தில் காற்றை வைத்துப் பயணம் செய்துள்ளார்கள்.  ஆனால், தமிழர்கள் காற்றையும் நீரோட்டத்தையும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.  கடற்கோள் அழிந்ததால் மட்டும் இவர்கள் செல்லவில்லை.  முன்பே, கடலில் பயணம் செய்யும் தன்மை பெற்றிருந்திருக்கிறார்கள். இந்த ஆய்வு தமிழரின் கடல் சார்  மேலாண்மை பற்றிய மிக பெரிய தகவல்களை தர போகிறது
தொல்காப்பியச் சிறப்பு
கட்டுமரம், தெறிமரம், தெப்பம் போன்ற கடல் சம்பந்தப்பட்ட பல பெயர்கள் தமிழில்தான் உள்ளன.  உலகில், கப்பலில் ஒரு நாளைக்கு 6 வேளை மணியடிப்பதைக் கடைப்பிடிக்கும் முறை இருந்துள்ளது.  தொல்காப்பியம் கூறும் சிறுபொழுது, பெரும்பொழுது முறைகள் இதனுடன் ஒத்துள்ளன. ஒரு நாளை 6 பொழுதுகளாகப் பிரித்துக் காட்டுகிறது தொல்காப்பியம்.  உலக இலக்கியங்கள் எதிலும் இதுபோன்ற பகுப்புமுறை இல்லை.  தமிழர்கள் நிலத்திற்குக் கொடுத்த மரியாதை ஆச்சரியப்பட வைக்கிறது.
இரும்பை உருக்கிய விதம்
உலக நாகரிகத்தில் இரும்பு நாகரிகத்திற்கு ஒரு முக்கியப் பங்கு உண்டு.
உலக நாடுகளில்  வானத்திலிருந்து விழக்கூடிய கல் மூலமா இரும்பு உருக்கினார்கள்.  தமிழர்கள்தான் மலைப்பாறை, கடற்கரை ஒட்டியுள்ள மணலிலிருந்து வார்ப்பு இரும்பு உருக்குகிற முறையினைப் பின்பற்றினர். 1794 இல் H.M.heath என்பவர் கல்கத்தா asiatic soceity il  பதிவு செய்துள்ளார்.
ஹிட்டிதீஸ் நாகரிகம்
உலகம் முழுவதும் சுரங்கம் மற்றும் உருக்கும் தொழில்முறை இருந்ததால் தமிழர்கள் உலகம்முழுதும் செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது.  அடிசு நாகரிகம் இன்னும் ஆச்சரியப்பட வைக்கிறது.  எங்கெங்கு இரும்பு நாகரிகம் இருந்ததோ அங்கெல்லாம் நெல் கொண்டு போனார்கள்.  சீனாதான் நெல் நாகரிகம் என்று சொன்னால்கூட, நெல் நாகரிகத்தை உலகில் பரப்பியதில் தமிழருக்கு முக்கியப் பங்கு உண்டு.
எனது ஆய்வில், முழுக்க முழுக்க தமிழக நிலம், தமிழர் நிலத்தன்மையை எப்படி அறிந்திருந்தார்கள், உலகத்தின் நாகரிகத்திற்கு எப்படிப் பயன்பட்டார்கள், முன்தோன்றிய மூத்தகுடி என்பதற்கான அடிப்படை ஆதாரங்களை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கமுடியும்.  இது தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் நிச்சயம் கொண்டுபோகும்.  அறிவியல் மூலமாக ஒரு பதிப்பாகக் கொண்டு வந்து வருங்கால சந்ததிக்குப் பயன்படும்வகையில் செய்யவேண்டும்.
இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் வந்தால் தமிழரின் தொன்மையை  வெளிக்கொண்டு வரலாம்.

நேர்காணல் : சமா. இளவரசன்

உதவி : செல்வா

படங்கள்: உடுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *