பார்வைக் குறைபாடு கொண்டவர்கள் வண்ணங்களைப் பிரித்துணரும் வகையில் “கலர் பிளைண்ட் பால்’’ என்ற புதிய செயலி அய்போனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி போனில் உள்ள கேமரா மூலம் படம் பிடிக்கப்படும் காட்சிகளில் உள்ள பல்வேறு வண்ணங்களைப் பிரித்துக் காட்டுகிறது. கேமராவில் உள்ள பில்டர் மற்றும் ஸ்லைடரைக் கொண்டு வண்ணங்களின் வேறுபாட்டை உணரலாம்.
இதற்கு முன்னர் பல வண்ணங்களைக் காணமுடியாத பலர், இந்தச் செயலியின் மூலம் முதல் முறையாக வண்ணங்களைத் துல்லியமாகப் பார்க்க முடிவதால் ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இயல்பான பார்வை கொண்டவர்கள், வண்ணக் குறைபாடு கொண்டவர்கள் காணும் காட்சிகள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் இந்தச் செயலியைப் பயன்படுத்தலாம்!
http://www.appicker.com/apps/1037744228/color-blind-pal