Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குறும்படம்

 

அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிகளால் அந்தந்த காலங்களில் எளிய மக்களின் மிகச் சிறந்த தொடர்பு கருவிகள் வழக்கொழிந்து போய்விடுகின்றன. பெருவாரியான மக்கள் அதை ஏற்றுக் கொண்டாலும் சிலருக்கு உணர்வுமயமான விசயமாக தொடர்ந்து விடுகிறது.

வடமாநிலம் சென்ற தமிழ்நாட்டுப் பெண்ணுக்கு ‘கடிதம்’ _ எப்படிப்பட்ட சிந்தனையை; தாக்கத்தை; உணர்வை ஏற்படுத்தியது என்பதை நல்ல கதையம்சத்துடன்; உன்னதமான மனித உணர்வுகளையும் கலந்து பேசுகிறது இந்த ‘இப்படிக்கு’ குறும்படம். சிறந்த இயக்கம் என்று சொல்லத்தக்க அளவில் காட்சிகளும், காதாபாத்திரங்களின் தேர்வும்! நடிப்பும் அமைந்திருக்கிறது. இயக்குநர் சிவா இதை எழுதி இயக்கியிருக்கிறார்.

15:22 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படத்தை youtube -இல் கண்டு மகிழலாம்.

– உடுமலை