Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

2 ஜி வழக்கு: நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க. வெற்றி!

 

 

 

திராவிடர் கழகத் தலைவரின் கருத்து

2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.அய். தனி நீதிமன்றத்தில் -தனி நீதிபதி ஷைனி அவர்கள் இன்று (21.12.2017) காலை அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு. உண்மைகளை உலகத்தாருக்கு அறிவிக்கும் -பொய்மையின் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு!

வரவேற்கிறோம்; பாராட்டி மகிழ்கிறோம். யாம் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காரணம், பெரியார் நுண்ணாடியில் முதலில் பார்த்து, இவ்வுண்மைகளை- எதிர் நீச்சலாக நாடு முழுவதும் எடுத்துச் சென்று பிரச்சாரம் செய்தது தாய்க் கழகமாம் தந்தை பெரியார் கண்ட இந்த சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர்கழகமே! இனிமேலாவது ‘‘கோயபல்சுகளும்‘’, அவர் களைத் தாங்கிப் பிடிக்கும் ‘ஊடக ஊதிகளும்‘ பாடம் கற்று, பொய்மைக்கு முடிசூட்டி துரோக ராகத்தை வாசிக்காமல், உண்மைகளை மறுக்கத் துணியாது எழுதட்டும்! நமது வாழ்த்துகள் வாய்மை வென்றிருக்கிறது. தி.மு.க. நெருப் பாற்றில் நீந்தி வெளிவந்துள்ள முழு விடுதலை பெற்ற நமது சகோதரர் ஆ.இராசா, கவிஞர் கனிமொழி, தயாளு அம்மாள், சரத்குமார் முதலிய அனைவருக்கும் நமது வாழ்த்துகள்!

‘காரிருளால் சூரியன்தான் மறைவ துண்டோ!’

கி.வீரமணி
சென்னை    தலைவர்
21.12.2017    திராவிடர் கழகம்.