Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது:

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (21.12.2017) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் எனக் கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கினால் மிகப்பெரிய அவதூறுகளைச் சந்தித்த, வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘இந்த வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது. அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் மீதான ஆதாரமற்றக் குற்றச்சாட்டுகளை பொய் என நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது’’ எனக் கூறியுள்ளார்.