இளைஞர்களின் எழுச்சி நாயகன்! 23 வருடங்களே வாழ்ந்தாலும் அதற்குள் இந்தியர் அனைவர் உள்ளத்திலும் நீங்கா இடம் பிடித்தவர். அவர் ஒரு விடுதலைப் போராளி மட்டும் அல்ல.
சிறந்த படிப்பாளி, கூர்மையான சிந்தனையாளர், தொலைநோக்காளர், ஆதிக்கம் அகற்றி சமதர்மம் உருவாக்க வேண்டும் என்ற உயரிய இலக்கில் செயல்பட்டவர். கடவுள் மறுப்பாளர், சமதர்மம், மதம், காதல், மாணவர் கடமை என்று பலவற்றைப் பற்றி ஆழமாய்ச் சிந்தித்துக் கருத்துக் கூறியவர். கம்யூனிஸ்ட்டுகளைவிட மார்க்சியத்தை பெரிதும் ஆய்வுக்கு உட்படுத்தியவர்! தந்தை பெரியாரின் உள்ளத்தில் உணர்வு பூர்வமாய் ஆழமாய்ப் பதிந்தவர்!