இந்தியாவில் உள்ள குழந்தைகளில் பாதி பேருக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது என்று கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியாகி உள்ள “2017 குளோபல் நியூட்ரிஷியன் ரிப்போர்ட்’’ தெரிவிக்கிறது. அய்ந்து வயதுக்குட்பட்ட 38% குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாம். அதில் 21% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையின்றித் தவிப்பதாகச் சொல்கிறது அந்த அறிக்கை.
இதில், 6 முதல் 59 மாதங்களான குழந்தைகளில் 58.4% பேருக்கு ரத்த சோகை பிரச்சினை உள்ளது என்பது அதிர்ச்சித் தகவல். மக்கள் தொகையில் ஆறு வயதுக்கும் குறைவான குழந்தைகளின் விகிதம் 13.6% என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.