Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மனைவி !

ஊதியம் இல்லாமல்
ஓயாது உழைக்கும்
ஒரே உழைப்பாளி!

உதையும் அடியும்
ஒருங்கே ஏற்றிடும்
உன்னத அடிமை!

கணவனின் காமம்
கழித்து முடிக்கும்
கட்டணமிலா கழிப்பறை!
வாரிசை வளர்த்து
வழங்கிட வந்த
வளமான விளைநிலம்!
கணவனை இழந்து
கைம் பெண் ஆனால்
காலம் முழுக்க
கரம்பு நிலம்!

மாடு உரசும்
மதில் சுவராய்
மனைவியை மாற்றினால்,
கேடு சூழ்ந்து
கீழ்த் தரமாக
நாடு ஆகாதா?

                                                                                                     – மஞ்சை வசந்தன்