ஜிப்பிசேஸ்’
‘ஜிப்பிசேஸ்’ எனும் காமிரா செயலி ஜிஃப் அனிமேஷன் வகைப் படங்களை உருவாக்க பயன்படுத்தப்படுகின்றது.
இந்தச் செயலி மூலம் ஜிப் படங்களில் வார்த்தைகளை இடம்பெற வைக்கலாம். வீடியோ படங்களில் சப் டைட்டில்களையும் சேர்க்கலாம். இதேபோல் வீடியோ கோப்பை உருவாக்கினால் போதும். அதன் ஒலி குறிப்புகளை வார்த்தைகளாக மாற்றி ஜிப்பாக உருவாக்கித் தருகிறது.
வார்த்தைகளின் வடிவத்தை விருப்பம்போல் மாற்றிக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. இதில் உருவாக்கப்படும் ஜிஃப் அனிமேஷன்களை சமூக ஊடகங்கள் வாயிலாகவும் பகிர்ந்துகொள்ளவும் முடியும். அய் போன்களுக்காக மட்டுமே தரப்பட்டுள்ளது.