Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புற்று நோய் உருவாக்கும் ஜான்சன் & ஜான்சன் பவுடர்

சமீபத்தில் அமெரிக்காவில் ஜான்ஸன் அண்டு ஜான்ஸன் என்ற புகழ்பெற்ற நிறுவனம் தயாரிக்கும் முகப்பவுடர் உபயோகித்த பல பெண்களுக்கு கர்ப்பப்பையில் புற்றுநோய் வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே, பெண்கள் அந்த நிறுவனத்தை எதிர்த்து அமெரிக்காவில் Missouri ñ£Gô St. Louis நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம் ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனத்திற்கு 300 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

வழக்குப் பதிவு செய்த பெண்கள் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். எனவே Missouri மாநில நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்திட அந்த நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

 உச்சநீதிமன்றம் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்டு Missouri நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்திட உத்தரவு பிறப்பித்தது. ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனமும் பாதிக்கப்பட்ட பெண்களும் வழக்கின் இறுதித் தீர்ப்பிற்காக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.