பதிவுகள்

செப்டம்பர் 01-15
  • டெல்லி செங்கோட்டை மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான வழக்கில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி முகமது ஆரிப்புக்கு மரண தண்டனையை உறுதிசெய்து ஆகஸ்ட் 10 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • ஆயிரம் ரூபாய் நாணயங்களை அச்சிட பாராளுமன்றத்தில் ஆகஸ்ட் 11 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • சிக்கிம் மாநிலத்தின் மேனாள் முதல்வர் நெர் பகதூர் பண்டாரிக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ஒரு மாதமாகக் குறைத்து நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அம்மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 11 அன்று சரணடைந்தவரை, சிறையில் அடைக்க நீதிபதி ஆணையிட்டார்.
  • ஒலியைவிட வேகமாகச் சென்று மலைப்பகுதியிலும் தாக்கும் பிரமோஸ் பிளாக் 3 ஏவுகணையின் சோதனை ஆகஸ்ட் 12 அன்று வெற்றிகரமாக நடைபெற்றது. சீன நாட்டில் தயாரான, பாகிஸ்தானின் பாக்சாட் 1 ஆர் செயற்கைக்கோள் ஆகஸ்ட் 12 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
  • நேபாள நாட்டின் பிரதமர் ஜலால் நாத்கனால் தனது பதவியை ஆகஸ்ட் 14 அனறு ராஜினாமா செய்துள்ளார்.
  • ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் மசோதாவை உருவாக்கக் கோரி டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள இருந்த அன்னா ஹசாரே ஆகஸ்ட் 16 அன்று கைது செய்யப்பட்டு, ஆகஸ்ட் 19 அன்று திகார் சிறையிலிருந்து வெளியில் வந்து ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
  • ஊழல் புகாரில் சிக்கிய கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சவுமித்ரா சென் மீது டெல்லி மேல்சபையில் ஆகஸ்ட் 17 அன்று பதவி நீக்கக் கண்டனத் தீர்மானம் நடைபெற்று, ஆகஸ்ட் 18 அன்று மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேறியது.
  • பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின்கீழ் மத்திய கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான தகுதி மதிப்பெண் 45 முதல் 50 விழுக்காடு நிர்ணயிக்கப்படலாம் என்ற டில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஆகஸ்ட் 19 அன்று உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
  • மேற்கு வங்கம் என்ற பெயரை பாஷிம்பங்கவாக மாற்றும் தீர்மானம் ஆகஸ்ட் 20 அன்று செய்யப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப் பட்டுள்ளது.
  • லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலியினுள் ஆகஸ்ட் 22 அன்று புரட்சிப் படையினர் புகுந்து பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றியதால் அதிபர் கடாபி தப்பி ஓடியுள்ளார்.
  • தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ரத்துசெய்யப்பட்டு, சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடப்படும் என்று ஆகஸ்ட் 23 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *