Amendments in Rape Law 2013 என்ற வகையில் பலாத்காரம் செய்திட்ட, பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் அதற்கான காயங்கள் இருக்க வேண்டிய தேவை இல்லை. அந்தப் பெண்ணின் வாக்கு மூலமே நீதிமன்றத்தில் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்திட போதுமானது என்ற முக்கிய திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.
மது பூரனிஈஷ்வர் என்ற சமூக ஆர்வலரும், கற்பழிப்பு குற்றஞ் சாட்டப்பட்ட 2 குற்றவாளிகளும் இந்த சட்டத் திருத்தம் சில பெண்களால் தவறுதலாக பயன்படுத்தப்பட்டு சில அப்பாவி இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பதிவு செய்த வழக்கு டில்லி அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் Gita Mittal மற்றும் Hari Shankar அவர்கள் முன்னிலையில் வந்தது. இந்த சட்டத்திருத்தத்திற்கு ஆதரவாக பல்வேறு மகளிர் அமைப்புகள். Anti Rape Coalition என்ற அமைப்பு.
அகில இந்திய ஜனநாயக மகளிர் அமைப்பு ஆகியவைகள் நீதிமன்றத்தில் வாதாடின. கற்பழிப்பு என்பது ஒரு குற்றம். அது ஒரு மருத்துவ சோதனை நடத்த வேண்டிய ஒரு சிகிச்சை அல்ல.
எனவே, உடலில் காயங்கள் இருந்தால்தான் ஒரு பெண் கற்பழிக்கப்பட்டார் என்று கூறிடுவது முற்றிலும் தவறான வாதம் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலமே போதுமானது என டில்லி அமர்வு நீதிமன்றம் அதிரடியான நியாயமான தீர்ப்பை அளித்தது.