சித்திரை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டா?
இது பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!
ஏற்கெனவே தி.மு.க. ஆட்சியில் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றப்பட்டு இரண்டாண்டு காலமாகிவிட்டது. நடைமுறையிலும் உள்ளது.
மறைமலை அடிகள், கா.சு.பிள்ளை, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்ற தலைவர்களால் ஏற்கப்பட்டு வலியுறுத்தப்பட்டதுதான் தை முதல் நாளே தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் என்பதாகும்.
சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு என்பது ஆரிய ஆபாசக் கதையை அடிப்படையாகக் கொண்டது. (நாரதர் என்ற ஆண் கடவுளுக்கும், கிருஷ்ணன் என்ற ஆண் கடவுளுக்கும் பிறந்ததாம்!) அதனை மீண்டும் கொண்டுவர சட்டம் இயற்றுவது தமிழர்கள்மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பாகும்.
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
– கி. வீரமணி
ஆசிரியர்