தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் -சட்டபேரவையில் ஜெ
அது இருக்கட்டும், முதல்ல சட்டசபையை வாடகைக் கட்டடத்தில் இருந்து எப்ப சொந்தக் கட்டடத்துக்கு மாத்தப் போறீங்க?
வினோத் மணி 09.08.2011 இரவு 7 மணி
கோவில் தேர்களை எல்லாம் பழுதுபார்க்க ஜெ. அரசு ஆணையிட்டுள்ளது. சொந்த வண்டியைக்கூட ரிப்பேர் செஞ்சு வச்சுக்க முடியாதவைகள் எல்லாம் கடவுள்களா?
இனநலம் – 09.08.2011 இரவு 10 மணி
ஓடு கொசுவே ஓடுனு தான் விளம்பரம் வருது,
சாவு கொசுவே சாவு, ன்னு விளம்பரம் பண்ணல. கொசு செத்துட்டா வியாபாரம் போயிடுமே.
அக்மார்க் பிசாசு குட்டி – 09.08.2011 இரவு 10 மணி
செய்தி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் பொம்மைகளைத் தயார் செய்து விற்கும் தொழிலாளர்கள் வங்கிக் கடன் கேட்டுள்ளனர். கேள்வி : ஏன், கடன் தீர்க்கும் விநாயகர் என்று ஒருவர் இருக்கிறாரே அவரிடம் விண்ணப்பிக்க வேண்டியதுதானே?
ஆரியர் பகைவர் திராவிடர் இராவணன் – 09.08.2011 இரவு 9 மணி
கடவுள் சக்தி எங்கே ? கடவுளை நம்பினால் கைவிடப்படுவீர். சிந்தியுங்கள்… தோழர்களே… அந்தோ பரிதாபம்… ஏழுமலையானைத் தரிசித்துவிட்டு காளகஸ்தி சிவனை வழிபடச் சென்ற வழியில் சென்னையைச் சேர்ந்த 4 கம்ப்யூட்டர் என்ஜினியர் உடல் நசுங்கி சாவு… கடவுள் காப்பாற்றவில்லை ஏன்? ஏற்கெனவே இதே காளகஸ்தி கோவிலில் வழிபட்டு விண்ணில் செலுத்தப்பட்ட இந்திய ராக்கெட் கடலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் இரத்தினம் நவநீதன் – 08.08.2011 இரவு 7.30 மணி
கலைஞர் டி.வி. நாளைய இயக்குநர் சீசன் 3 நிகழ்ச்சியின் புதிய நடுவராக இயக்குநர் கே.பாக்யராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். ரெட்டைப் பார்ப்பனர்களாக கோலோச்சி வந்த மதன், பிரதாப் போத்தன் கதை முடிகிறது. சுஹாசினி உள்ளிட்ட இன்னும் ஒரு சில பார்ப்பனர்கள் கலைஞர் டி.வி.யில் சம்பளம் வாங்கிக்கொண்டு சங்கராச்சாரிக்குச் சேவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் சீட்டும் கிழிக்கப்பட்டால் நல்லது.
மேகவண்ணன் புதிய தடம் – 09.08.2011 பகல் 1 மணி
ரம்யா கிருஷ்ணன் கைதா?
இன்னும் ரம்யா கிருஷ்ணனும் சங்கீதாவும் கைது செய்யப்படவில்லையா? விஜய் டி.வி. ஜோடி நம்பர் ஒன் அகற்றப்படவில்லையா? ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் செய்த குற்றம் சாதாரணமானதா? இல்லை, இல்லை. ஆறாம் வகுப்புப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை ஜோடி நம்பர் ஒன்னில் காட்டினார்கள். அதுமட்டுமா? அம்மாவுக்குப் பிடிக்காத -அந்தப் பாடல் இடம் பெற்றதாலேயே பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படாமல் உள்ள-ன. மேல்மக்கள் விரும்பாத அந்தச் செம்மொழிப் பாடலை விஜய் டி.வி.யில் பாடி நடனம் ஆடினார்கள். (ஞாயிற்றுக் கிழமை இந்த அநியாயம் அரங்கேறியது.)
அதற்கு முதல் பரிசு வேறு… இந்த அநியாயத்தை அம்மா கவனத்துக்கு யாராவது கொண்டு போகலையா? அய்ய..கோ சோவிடமாவது சொன்னால் போதுமே… தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியில் செம்மொழியைப் புகழலாமா? சமஸ்கிருதத்தின் தரத்துக்குத் தமிழ் ஈடாகுமா? ரம்யா கிருஷ்ணன் கைது எப்போது?
சு.பொ.அகத்தியலிங்கம் – 08.08.11 பகல் 12:58
ட்விட்டர்
நயன்தாரா தனக்குப் பிடித்த மதத்தில் தன்னை இணைத்துக் கொண்டாலும் அவரால் விரும்பிய ஜாதியில் இணைத்துக் கொள்ள இந்து மதத்தில் இடமுண்டா? #கன்பீசன்
அதிஷா – 09.08.11 மாலை 4:50
முகநூலில் ஒரு குட்டிக் கதை
ஒரு ஆமை கதை சொல்றேன். மார்கழி மாதம் பயங்கர குளிரு. காட்ல ஒரு ஆமை ஊ…ஆ… ன்னு நடுங்கிட்டு இருந்தது.
அந்தப் பக்கமா ஒரு வேடன் வந்தான். ஆமையைப் பார்த்து, ஆமை ஆமை என் கூட வா உன்ன சுடுதண்ணில குளிக்க வைக்கிறேன் அப்படீன்னு கேட்டான். ஆமையும் அவன் பேச்சை நம்பி அவன் கூடப் போச்சு. ஒரு அடுப்பை பத்த வெச்சு அது மேல ஒரு பாத்திரத்தை வெச்சு அதுக்குள்ள ஆமையை இறக்கி விட்டான். தண்ணி கொஞ்சம் சூடாச்சு. ஆமைக்கு ஒரே சந்தோஷம், ஆகா குளிருக்கு இதமா இருக்கேன்னு. சூடு ஏற ஏறத்தான் தெரிஞ்சது, அய்யய்யோ நாம செத்துக்கின்னு இருக்கோமேன்னு.
அது போலத்தான் கெட்ட நண்பர்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் ஆரம்பத்தில சந்தோஷத்தைக் கொடுக்கும். போகப்போக நம்மை அழிச்சுடும். ஜெயிச்சு வந்தவுடன் போட்ட தீர்மானம் சந்தோஷமா இருந்தது. சமச்சீர் கல்வி எனும் சூடு ஏறும்போதுதான் புரியுது நாம வெந்துக்கிட்டு இருக்கோம்னு.
– ராஜேஷ் தீனா, இளைஞர் இயக்கம், திண்டிவனம்