சராஹா
இச்செயலி மூலம் யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும்.
நீங்கள் தகவல் அனுப்ப விரும்பும் நபருக்கு, நீங்கள் யாரென்று தெரியாமலேயே தகவல்களை அனுப்பி அவர்களின் ஆவலைத் தூண்டுவதோடு, யார் வேண்டுமானாலும் யாருக்கும் அவர்களது கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ இதன் மூலம் பதிவு செய்யலாம்.
அண்மைக்காலத்தில் இந்த “மொட்டைக் கடுதாசி’’ செயலி சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
IOS மற்றும் ஆண்ட்ராய்ட் இயங்கு தளங்களில் ‘சராஹா’ (Sarahah) ஆப்பை பயன்படுத்த முடியும். மேலும் கணினிக்கான வடிவமும் இருக்கிறது.
– அரு.ராமநாதன்