மாசிலன் ஆதல்
பெரும்பாலும் உரையாடல்களே இல்லாமல் ஒரு குறும்படம். சொல்ல வந்ததை அழுத்தமாகச் சொல்லிக் காட்சி ஊடகத்தின் வலிமையைச் சொல்லும் ஒரு குறும்படம். குறும்படத்தின் பெயர் “மாசிலன் ஆதல்’’. குடித்துவிட்டு வாகனத்தை ஓட்டி ஒரு இளம் குடும்பத் தலைவரைக் கொலை செய்துவிட்டு மன உளைச்சல் தாங்காமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் சென்று மன்னிப்புக் கேட்டுவிட்டு, சாலையில் தானாக விபத்துக்குள்ளாகி இறந்துபோகிறார்.
இதில் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் கைகோர்த்துச் செயல்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும் முடிவு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. வாகனங்களை ஓட்டுவோரும், மற்றவர்களும் கட்டாயமாகப் பார்க்கப்பட வேண்டிய குறும்படம் இது. குரங்குப்பெடல் கிரியேஷன்ஸ் இதைத் தயாரித்திருக்கிறது. நாதன் இயக்கியிருக்கிறார். 21:11 நிமிடம் ஓடும் இக்குறும்படத்தை இதே பெயரில் யூடியூப்பில் காணலாம்.
— உடுமலை