வங்கியில் பணம் எடுக்க உயில் மட்டும் போதுமா?

ஆகஸ்ட் 16-30

ஒரு நபர் தன் வாழ்நாளில் உழைத்துச் சம்பாதித்த சொத்துகளை தனக்குப் பிறகு யாருக்குச் சேர்ந்திட வேண்டும் என உயில் எழுதிவைத்து விட்டு இறந்துவிடுகிறார். உடனே அந்த உயிலைப் பயன்படுத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் இறந்துவிட்ட நபரின் சொத்துகளை அனுபவித்திட முடியாது. முறைப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பித்து “PROBATE” என்ற அங்கீகாரத்தைப் பெற்றிட வேண்டும். சரி, இறந்துவிட்ட நபர் உயிலில் தன்னுடைய வங்கியில் இருக்கும் பணத் தொகையை ஒரு நபரின் பெயரைத் தெளிவாக குறிப்பிட்டு வங்கி அவர் கணக்கிற்கு மாற்றிடவேண்டும் என எழுதி வைத்துள்ளார்.

அதன்படி வங்கி இறந்துவிட்ட நபரின் கணக்கில் உள்ள பணத்தை உயில் குறிப்பிட்டுள்ள நபருக்கு உயிலின் நகலைச் சமர்ப்பித்தால் கொடுத்திடுமா? இதுபோன்ற வழக்கு மும்பை அமர்வு உயர்நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் A.S.OKA மற்றும்  A.K.Menon அவர்கள் முன்னிலையில் வந்தது.

அமோல் பட்டீல் என்பவரின் உறவினர் தன்னுடைய வங்கிக் கணக்கில் உள்ள பணத் தொகையை அமோல் பட்டீலுக்கு மாற்றிக் கொடுத்திடவேண்டும் என உயில் எழுதி வைத்துவிட்டு இறந்துவிட்டார்.

அமோல் பட்டீல் வங்கியில் மனுச் செய்திட்டபோது வங்கி முறைப்படி நீதிமன்றத்தில் PROBATE வாரிசுச் சான்றிதழ் சமர்ப்பித்தால் மட்டுமே பணத்தொகையை மாற்றிட முடியும் என கூறிவிட்டது.

வங்கியின் உத்தரவை எதிர்த்து அமோல் பட்டீல் மும்பை உயர்நீதிமன்றத்தில் நாம் ஏற்கெனவே குறிப்பிட்டபடி மனுச் செய்திட்டார். ஆனால் இந்திய வாரிசுரிமைச் சட்டம் (1925) பிரிவு 57 விதியின்படி நீதிமன்றத்தில் வாரிசுரிமைச் சான்றிதழ் பெற்ற பிறகுதான் வங்கியில் பணத்தொகையை மாற்றிட முடியும். வங்கியின் முடிவு சரியானதே என்று தீர்ப்பு கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர்.

(மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பு, நாள்: 20.04.1917)

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *