MR. COBBLER
எல்லா மனிதர்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதுதான் மனிதநேயவாதிகளின் இலக்கு. ஆனால், இன்றும் அது முழுமையடைவதில் மனத்தடைகள் சிலருக்கு இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒருவரை கதாபாத்திரமாக்கி அவரையும் ஒரு சிறு குழந்தை மாற்றுவதாக இந்தக் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. சாலையோரம் செருப்பு தைத்துக்கொண்டிருக்கும் ஒருவரிடம் தன் பூட்சை காலோடு நீட்டி பாலிஸ் போடச் சொல்கிறார் ஒருவர்.
அதேநேரத்தில் ஒரு சிறுமி தன்னுடைய பூட்சுக்கும் பாலிஸ் போட பூட்சை காலிலிருந்து கழட்டிக் கொடுக்கிறாள். அதைப் பார்த்து காலோடு பூட்சை நீட்டியவர் அதிர்ச்சி அடைகிறார். Learn to Respect all kinds of people என்று முடிகிறது.
இந்தக் குறும்படம் குருதர்சன் புரொடக்சன் தயாரிப்பில், சதீஷ் குருவப்பன் இயக்கியுள்ளார். 2:10 நிமிடம் மட்டுமே ஓடக்கூடிய இதை Youtube -இல் Mr.COBBLER என்ற தலைப்பில் காணலாம்.
– உடுமலை