காசநோயால் ஆண்டிற்கு பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இதில் மேற்கு ஆப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இதற்குக் காரணம், காசநோயை துரிதமாகக் கண்டுபிடிக்கும் வழிமுறை இல்லாதது அல்லது அதிக செலவாவதனால்தான் என்று கண்டறிந்து, அதைப் போக்க, இப்போது சூரிய சக்தியினால் காசநோய் இருப்பதைக் கண்டறியும் கருவியை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன்மூலம் குறைந்த செலவில் நோயைக் கண்டறிந்து உடனுக்குடன் சிகிச்சை அளிக்க முடிகிறது என்கின்றனர்.
இதனை அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாத நாடுகளும் மின்சார வசதி இல்லாத தொலைதூரப் பிரதேசங்களும் பயன்படுத்தி, உடலுக்குள் காசநோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து குணப்படுத்தவும், மற்றவர்களுக்கு அந்நோய் பரவாமல் தடுக்கவும் முடியுமென கருதப்படுகிறது.
Leave a Reply