2,700 முழுநேரத் தூய்மைப் பணியாளர்கள், இதில் 90% தலித்துகள், அதிலும் 35% பெண்கள். இது மதுரை மாநகராட்சியில் தெருக்களைத் தூய்மைப்படுத்தும் தொழிலாளர்கள்.
தூய்மை என்றால் குப்பையல்ல, கழிப்பறை, தெருவோரங்களில் உள்ள மனிதக் கழிவுகளை தூய்மை செய்யும் பணியாகும்.
இதுபற்றிய தகவல்களைத் திரட்டி ஆவணப்படுத்தி, ஒரு கடைசிப் பதிவாகத் (ஆவணப்படம்) தந்திருக்கிறார் ஸி.றி. அமுதன், மதுரை கீழத் தோப்பிலுள்ள கோயில் மதில் சுவரையொட்டிய தெருவை கழிப்பறை வசதி இல்லாதப் பெண்கள், குழந்தைகள் கழிப்பறையாக பயன்படுத்து கின்றனர்.
ஒரு தலித் பெண் காலை 6 மணி முதல் 9 மணி வரை அதைச் தூய்மை செய்யும் பணியைச் செய்கிறார். அருகில் செல்லவே இயலாத துர்நாற்றம் வீசும் அந்த இடத்தில் கால்களில் செருப்பு இல்லாமல், கைகளில் உறைகள் இல்லாமல், எந்தவிதமான குறைந்தபட்ச பாதுகாப்பும் இன்றி அந்தப் பெண்மணி துடைப்பம் கொண்டு தூய்மை செய்து, அதை ஒரு கூடையில் அள்ளி, தலையில் வைத்துச் சுமந்து சென்று மாநகராட்சி வண்டியில் கொட்டுகிறார்.
குடிகாரக் கணவன் இறந்துவிட்டதால் தன் பிள்ளைகளை இந்தப் பணி செய்துதான் வளர்க்கிறார். இதனால் காலரா, ஆஸ்துமா, கேன்சர், மலேரியா போன்ற நோய்கள் வருவதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
அரசின் அலட்சியத்தை இந்த ஆவணப்படம் தோலுரித்துக் காட்டுகிறது. இது இதே பெயரில் ஹ்ஷீutuதீமீ-ல் காணலாம். மொத்தம் 26 நிமிடம் ஓடக்கூடிய இப்படத்தை ‘மறுபக்கம்’ தயாரித்து வெளியிட்டுள்ளது.
– உடுமலை