பொதுவாக நம் நாட்டில், நாம் உண்ணும் பல உணவுப் பொருட்கள் மருந்தாகவும் பயன்படுகிறது என்பது பலருக்குத் தெரியாது. அவை பாட்டிவைத்தியம் என்ற பெயரில் முடங்கிக் கிடக்கிறது.
நாம் பாட்டி வைத்தியம் என்ற பெயரில் அன்றாடம் மருந்தாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் சில பொருட்கள் இன்று உலக அளவில் ஆராயப்பட்டு அதில் உள்ள மருத்துவக் குணங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர் சு.நரேந்திரன் தனது ‘நோயின்றி வாழ உணவே மருந்து’ என்ற நூலில் தெரிவிக்கிறார்.
மேலும் அவர் ஒரு சுவையான கருத்தினையும் அதில் தெரிவிக்கிறார். அதாவது, ஜார்ஜ் வாஷிங்டனுக்கு சளி பிடித்தால், அவர் தூங்கப் போகும்முன் சூடான வறுத்த வெங்காயத்தைச் சாப்பிடுவாராம்.
Leave a Reply