உள்ளுறுப்புகளுக்கான உணவு…

ஜூலை 01-15


இந்த அண்டத்தில் உள்ள அசாதாரணமான அதிசயம்தான் மனித உயிரினம். எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஒத்துப்போகும் குணாதிசயத்தைக் கொண்ட மனித உயிரினம். சில குறிப்பிட்ட நிலைகளில் தன்னைத் தானே ஆற்றிக் கொள்ளும்.

மனிதனின் ஒவ்வொரு உடல் உறுப்பும் எப்படி தன்னைத்தானே பழுது பார்த்துக் கொள்ளும்? அதற்கு நீங்கள்தான் அவற்றைக் கீழ்க்கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.

நுரையீரல்கள்

புகைப்பிடிப்பதும், மாசுவும் உங்கள் நுரையீரல்களை பெருவாரியாக பாதிக்கும்.

புகைப்பிடிக்காமலும், உடற் பயிற்சியில் ஈடுபட்டும் வந்தால் உங்கள் நுரையீரலில் உள்ள சளி நீங்கி, அவை குணமடையத் தொடங்கும். வைட்டமின் ஏ நிறைந்துள்ள உணவுகள் மற்றும் ரெடிநோயிக் அமிலமும், உங்கள் நுரையீரல் குணமடைய உதவும். சர்க்கரை வள்ளிக் கிழங்கு மற்றும் கேரட் சாப்பிடுவதும்கூட உதவி புரியும்.

கல்லீரல்

அளவுக்கு அதிகமாக மது குடித்தால் அவை கல்லீரலில் தாக்குதலை ஏற்படுத்தும். நீங்கள் அதிர்ஷ்டசாலி என்றால், ஈரலில் சிறிய பகுதி ஏற்கனவே கிட்டத்தட்ட செத்துப் போயிருந்தாலும்கூட, அவை மீண்டும் வளரலாம். ஆனால், கல்லீரல் இழைநார் வளர்ச்சி மூலம் கல்லீரலை நீங்கள் கொல்லாமல் இருந்திருந்தால் மட்டுமே இது சாத்தியம். மதுவைத் துறந்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி அடங்கிய நச்சுத்தன்மையை நீக்கும் உணவுகளை உண்ணுவது மிகவும் முக்கியமாகும்.

எலும்புகள்

எலும்புகள் ஒரு பகுதி உடைந்து விட்டால், அது குணமடைய மீதமுள்ள பகுதியின் அணுக்கள் கடினமாக வேலை செய்யும். இந்த குணமாக்குதலை துரிதப்படுத்த, வைட்டமின் ‘கே’ அடங்கிய பச்சைக் காய்கறிகளை உண்ண வேண்டும். மேலும், சிறிது காலம் படுக்கை ஓய்விற்குப் பிறகு, எலும்பு வளர்ச்சியில் அழுத்தம் போட மிதமான நடவடிக்கைகளில் ஈடுபட பரிந்துரைக்கப்படுகிறது.

மூளை

சீரான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வந்தால், உங்கள் மூளை அற்புதமாக நியூரான்களை பெறும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு உறுப்பாக, மீளுருவாக்கம் செயல் முறையில் உங்கள் மூளைக்கு உதவிட இது ஒரு சிறந்த வழியாகும்.

 

குடல்கள்

நீங்கள் மதுவும், அசிடிக் உணவுகளும் உட்கொண்டு வந்தால், உங்கள் குடல்கள் நாசமாகிவிடும். அவ்வகையான பழக்கங்களை நிறுத்தி விட்டு, நார்ச்சத்து நிறைந்த இயற்கை உணவுகளை உட்கொண்டு, அணுக்கள் குணமுடைய உதவுங்கள். முழுதானியங்களையும் உண்ணுங்கள்.

முக்கிய தகவல்கள்:

மேற்கூறிய உறுப்புகள் தீவிர பாதிப்பிற்கு உள்ளானால், அவற்றை மீட்பது முடியாத காரியமாகி விடும்.

நீங்கள் புகைப்பிடிக்கும் மற்றும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், நோய் மீட்டெழுதலின் போது அவற்றைக் கைவிடுவது நல்லது.

உங்கள் உடல் அமைதியான நிலையில் இருந்தால்தான் குணமடைதல் மிகவும் முக்கியம்.
எதையேனும் ஒன்றை ஆய்வு செய்வதற்கோ அல்லது முயற்சி செய்வதற்கோ முன்பு, உங்கள் மருத்துவரிடம் கலந்தாலேசிப்பது முக்கியமாகும். நீங்கள் படித்தது எதுவுமே உங்கள் உண்மையான  உடல்நிலை பற்றிய முழு விவரத்தையும் அளிக்காது.

ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றினால், உங்கள் உடலில் உள்ள சில உறுப்புகள் தங்களைத் தாங்களே பழுது பார்த்துக் கொள்ளும் என்பதை இப்போது புரிந்து கொண்டீர்களா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *