வாசகர் மடல்

ஜூலை 01-15

தி.காயத்திரி,
பரங்கிப்பேட்டை

உண்மை ஆசிரியருக்கு வணக்கம்!

ஜூன் 01.06.2017 அன்று வெளிவந்த தனி இதழ் ‘உண்மை’ என்ற புத்தகம். மக்களின் விழிப்புணர்வு, நம்பிக்கை, தெளிந்த நல்லறிவு, சிந்திக்கும் திறன், சட்டம் பற்றிய தகவல்கள், சாமியார்களின் மூடப் பழக்கங்கள், மக்களை ஏமாற்றும் திறமைகள், அரசியல் ஆட்சி முறைகளும் அவர்கள் இனவாரியாக மக்களுக்கு செய்யும் சதியினையும், இந்துமத தகவல்கள், அறிவியல் வளர்ச்சி, இளமைத் திருமணம், கடவுளின் மூலம் நோய் சரியாகும், காவி ஆடை அணிந்து சாமியார்கள் செய்யும் கொடுமை இதற்கு அரசின் ஒத்துழைப்பு.

நன்றாகப் படித்தவர்களுக்கு சீட்டு இல்லை, பணம் கொடுத்தால் வாங்கலாம் என்ற நிலையை மாற்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. பாராட்டுக்குரிய செய்தி, இங்கு இருந்த விழிப்புணர்வு, சிந்தித்த அறிவுதான் காரணம்.

சமூகத்தில் மக்களின் நிலை, விவசாயிகளின் வறுமை, இலக்கியம் பற்றியச் செய்தி, சிந்திக்கத் தவறும் மந்தை மனிதர்கள், பிள்ளையார் பேனா சிறுகதை, செய்யக் கூடாதவை, +2 முடித்தவர்களுக்கு ஜப்பானில் இலவச மேற்படிப்பு மற்றும் தொழிற்கல்வி, பக்தியுடையவனுக்கு புத்தி மட்டு என்ற செய்திகளையும், அரசர் மக்களை வழிநடத்தும் விதம், விதவைகளை பற்றி கணவனின் இழப்பினால் அவர்கள் அடையும் துன்பங்களும் நமக்கு உண்மை இதழ்மூலம் தெரிந்தது.

சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்றுதான், சட்டம் ஒன்றுதான் என்று பார்த்தால் தீட்சதர்கள் செய்யும் சட்டவிரோத குழந்தைத் திருமணம், அரசின் நடவடிக்கைகளை எடுத்துச் சொன்ன (உண்மை ஆசிரியருக்கு நன்றி) பலப்பல முகங்களை இதில் தெளிவாகப் படித்துத் தெரிந்துகொண்டோம்.

தன்நம்பிக்கை தெளிந்த அளிவு, சிந்திக்கும் திறன், அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிவிற்கு ஏற்றதை ஏற்றுக்கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள் என்ற பெரியார் கூற்று எனக்குப் பிடித்தவை.

மேற்கண்ட தகவல்களைக் கூறிய உண்மை ஆசிரியர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி மற்றும் பாராட்டுகள்!!

மேன்மேலும் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறுகதை, கருத்துகளையும் சமூகத்தில் பரப்பி சமூகத்தை நன்மை அடையச் செய்ய வேண்டும்.

நன்றி!!

– தி.காயத்திரி,
19ஏ, மாதா கோயில்,
பரங்கிப்பேட்டை,
புவனகிரி, கடலூர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *