பனகல் அரசர் பிறந்த நாள் 09.07.1866

ஜூலை 01-15


பனகல் அரசர் சென்னை மாகாணத்தில் ஆறு ஆண்டுகாலம் நீதிக்கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர்.

பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய ஆர்வமும் ஆற்றிய ஆக்கரீதியான செயல்களும் அளப்பரியன.

அரசு நிர்வாகத்தை மிகச் சிறப்பாக நடத்தியவர். மருத்துவத் துறை பெரும்பகுதி வெள்ளையர் ஆதிக்கத்திலும், அடுத்து பார்ப்பனர் ஆதிக்கத்திலும் இருந்த நிலையில் அதன் முக்கிய பொறுப்புகளில் பார்ப்பனரல்லாதாரை நியமித்து ஓரளவு அந்த ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தியவர்.

சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகியவை அடியோடு அழிந்து போகவிருந்த நிலையில், அவற்றிற்கு ஆதரவு காட்டி உயிர்ப்பித்தவர். இன்று கீழ்ப்பாக்கத்தில் அமைந்திருக்கும் அரசு அண்ணா சித்த மருத்துவ ஆராய்ச்சி மருத்துவமனைக்கு அந்த இடத்தை தமது சொந்த செலவில் வாங்கி உருவாக்கினார். கிராமப்புற ஏழை எளியவர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைத்திட புதிய திட்டங்களை வகுத்தவர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்க சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப் பட்டவர்களும் மருத்துவப் படிப்பைப் படிக்க வழிகோலினார்.

இந்து அறநிலையத் துறையை உருவாக்கி பெருமளவு மதச் சுரண்டலை தடுத்து கோயில்களை அரசுக்குச் சொந்தமாக்கியவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *