Mycall app மைகால் ஆப் என்னும் புதிய ஆப்பை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிமுகம் செய்துள்ளது.
இதில் தொலைபேசி அழைப்புகளின் தர கண்காணிப்பு, நெட்வொர்க் பிரச்சனை மற்றும் ஆடியோவில் தாமதம் உள்ளிட்டவை பற்றி வாடிக்கையாளர்கள் தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நுகர்வோர் மற்றும் சேவை வழங்குபவர்களிடையே வெளிப்படைத்தன்மை இருக்கும் என்று ட்ராய் கருதுகிறது.
– அரு.ராமநாதன்