மகளிர் காவல் நிலையத்தில் காவல் அதிகாரியாக இருக்கும் ஒரு பெண்ணின் அன்றாடப் பணிகளை இந்த ஆவணப்படம் பதிவு செய்திருக்கிறது.
மகளிர் காவல் நிலையத்தில் குடும்பச் சண்டை காதல் பிரச்சினை, ஈவ்டீசிங், கிரிமினல் குற்றங்கள் என்று ஏராளமான அனுபவங்கள்.
அதில் ஒரு பெண் கான்ஸ்டபிள் தன்னிடம் துப்பாக்கி இருப்பதால் ஆண்கள் தன்னிடம் வரவே அஞ்சுவார்கள் என்று சொல்கிறார். அந்தப் பெண் அதிகாரி கூறும்போது, பெண்களிடம் தங்கள் உரிமைகள் பற்றிய அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
“பெண்கள் காவல் நிலையத்தால் எங்களுக்குத் துணிச்சல் ஏற்பட்டிருக்கிறது. எங்கள் கால்கள் முன்னே செல்கின்றன. பின்னோக்கி அல்ல’’ என்கிறார். இதன்மூலம் பெண்களுக்குக் கொடுத்த வரதட்சனையைத் திரும்ப வாங்க முடியும் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பணிகளுக்கிடையில் 2012இல், டில்லி மாநகரில் ஓடும் பேருந்தில் ஒரு இளம் பெண்ணை கற்பழித்தக் கயவர்களைத் தேடும் பணி என்று காலையில் எழுந்ததிலிருந்து இரவு வரையிலும் பல்வேறு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதன் இயக்குநர் ஸிuலீவீ பிணீனீவீபீ நேரம் 47:23. இந்த ஆவணப்படம் இதே தலைப்பில் சீஷீutuதீமீஇல் காணலாம்.
– உடுமலை