Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

காமராசரின் மாண்பு!

அமெரிக்க அதிபர் நிக்சன் இந்தியா வந்த சமயத்தில் காமராஜரைப் பார்க்க விரும்பினார். அவரைப் பார்க்க விரும்பவில்லை என காமராஜர் கூறிவிட்டார்.

அதற்கு அவரது செயலாளர், “ஐயா, உலகமே பெருமைப்படும் அமெரிக்க அதிபர் உங்களைப் பார்க்க விரும்பியும் நீங்கள் ஏன் சந்திக்க மறுத்து விட்டீர்கள்’’ என வினவினார்.

அதற்கு காமராஜர் அளித்த பதில், “நம்ம ஊர் அண்ணாரை அமெரிக்கா சென்றபோது நிக்சனை சந்திக்க விரும்பியபோது, நிக்சன் அவர்களைச் சந்திக்க விரும்பவில்லை. நம்ம ஊர்க்காரரைப் பார்க்க விரும்பாத அவரை நாம ஏன் பார்க்கணும்’’ண்ணேன் என்றார்.

அரசியலில் எதிரும் புதிருமாக அண்ணாவும் காமராஜரும் இருந்தபோதிலும்கூட அண்ணாவை சந்திக்க மறுத்த அமெரிக்க அதிபர் நிக்சனை தானும் சந்திக்க மறுத்த உயர்ந்த உள்ளம் கொண்டவர் காமராஜர் அவர்கள்.