செல்லாத ரூபாய் நோட்டுகள் அறிவிப்பால் சீரழிந்த பொருளாதாரம்

ஜூன் 16-30

 

 

2014ஆம் ஆண்டில் அனைத்து ஊடகங்-களின் ஒட்டுமொத்த கவர்ச்சிப் பிரச்சார உத்திகளால் கட்டப்பட்ட ஒரு மாயத் தோற்றத்தின் கதாநாயகனான மோடி பிரதமராக பதவியேற்றது முதல் கொண்டுவந்த திட்டங்களில் மிக உன்னதமான திட்டமாக பிரச்சாரம் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதே நடைமுறையில் மிகவும் மோசமான திட்டம் என்பது பல நிலைகளில் மெய்ப்பிக்கப்-பட்டுள்ளது. இத்திட்டம் கொண்டு வந்ததற்கான காரணங்களாகக் கூறப்பட்டவை:

1.    கருப்புப் பணத்தை வெளிக் கொண்டு வருதல். அதன்மூலம் அந்தப் பணத்துக்கு அபராதம் வசூலிப்பதன் மூலம் அரசின் வருவாயைக் கூட்டுதல்.

2.    போலி நோட்டுகள் புழக்கத்தை ஒழித்தல். இதனால் பாகிஸ்தான் போன்ற பகை நாடுகள் போலி இந்திய நோட்டுகளை அடித்துப் புழக்கத்தில் விட்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் எண்ணத்தைச் சிதறடித்தல்.

3.    நாணயமில்லா பரிவர்த்தனையை ஊக்குவித்து முழுமையாக்குதல். இதனால் லஞ்ச லாவண்ய நடவடிக்கைகளைக் குறைத்தல் போன்றவையாகும்.

ஆனால் நடைமுறையில் இம்மூன்று நிலைகளிலும் இத்திட்டம் தோல்வியையே தழுவியுள்ளது என்பதே நிதர்சனம். மக்கள் பணத் தட்டுப்பாட்டாலும், வங்கிச் செயல்-பாடுகள் முடக்கத்தாலும் ஏடிஎம் மய்யங்களில் பணம் பெற முடியா நிலைகளாலும் அவதிப்-பட்டதே இத்திட்டத்தின் சாதனையாகும்.

பழைய நோட்டுகளை மாற்றுவதில் பல முறைகேடுகள் நடந்ததோடு கார்ப்பரேட் நிறுவனங்கள் இதனால் பெரும் லாபம் அடைந்தன என்பதே உண்மை. பல வங்கிகளே முறைகேடு-களுக்குத் துணைபுரிந்து அப்பணி-யாளர்களும் முறை தவறிய செயல்களினால் பெரும் பயன் பெற்றனர் என்பதும் பல செய்தித் தாள்களில் வெளியான செய்திகளால் வெளிச்சத்துக்கு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. கண்டுபிடிக்கப் பட்டவைகள் மிக மிகச் சிலவே. ஆனால் யாருடைய கவனத்துக்கும் எட்டாத நிலையில் அரங்கேறிய அக்கிரமங்கள் மிக அதிகம் என்பதைச் சான்றுகள் தேவையின்றியே சராசரி மனிதனும் புரிந்துகொள்வான்.

இத்திட்டம் போதுமான முன்னேற்பாடு-களின்றி அறிவிக்கப்பட்டு விட்டதால் புதிய நோட்டுகள் அச்சடிப்பதில் தாமதம், ‘குறிப்பிட்ட காலத்துக்குள்’ நோட்டுகள் அச்சடிப்பதற்குப் போதுமான வசதிகள் இல்லாத அரசாங்கத்தின் அம்மணமும் அரங்கேறியதே!

நோட்டுகள் அச்சடிப்பதற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் செலவாகிறது என்பது மட்டுமல்ல பழைய நோட்டுகளைத் துண்டுகளாகக் கிழித்து அழிப்பதற்கு மேலும் பல ஆயிரம் கோடிகள் செலவிடப்பட வேண்டிய நிலையில் வழிபிதுங்கி விக்கித்து நிற்கிறதே ரிசர்வ் வங்கி. ஆம். “கோழி போனதுமன்றி குரல் ஆவி போகிறது’’ என்பார்களே கிராமங்களில் அதுபோன்ற நிலையில் இன்று பழைய நோட்டுகளை அழிப்பதற்கு வகையறியாமல் திகைக்கிறது. இதற்காக ராணுவத்தின் உதவியை நாடவும் முயல்கிறது ரிசர்வ் வங்கி.

மார்ச்சு 31இல் உள்ள நிலவரப்படி 15.7 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடிகள்) 500 ரூபாய் நோட்டுகளும் 6.3(பில்லியன்) ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் தேங்கிக் கிடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பழைய நோட்டுகளை கோபுரமாக செங்குத்தாக அடுக்கினால் இமயத்தின் எவரெஸ்ட் சிகரத்தைப் போன்று 30 மடங்கு உயரம் உயர்ந்து நிற்கும் என்று கூறுகிறது ஒரு கணக்கீடு.

பழைய நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு முடிவடைந்தபோது 16.4 பில்லியன் அழிக்கப்பட வேண்டிய நோட்டுகள் 19 ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டு, எண்ணி முடிக்கப்பட்டு, சரி பார்க்கப்பட்டு அதன் பிறகு அழிப்பதற்கு அனுப்பப்படு-வதற்கான நிலையிருந்தது.

இந்த அலுவலகங்களில் ஒவ்வொன்றிலும் 3 அல்லது 4 நான்கு அழிப்பு இயந்திரங்கள் (சிறு சிறு துண்டுகளாக வெட்டி அழிக்கும்) தினமும் 5 பணியாளர்களுடன் 2 பணி நேரங்கள் (ஷிலீவீயீts) செயல்பட்டு வருகின்றன. இதுவன்றி தனியார் வங்கிகளிலிருந்தும் இப்படி அழிப்பதற்கான இயந்திரங்களை வாடகைக்குப் பெற்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இரண்டு மூத்த அதிகாரிகள் இப்பணியை சிசிஜிக்ஷி  ஒளிப்படக் கருவிகளுடன் மேற்பார்வை-யிட்டு வருகிறார்கள். போலி நோட்டுகள் எவ்வளவு உள்ளன என்பதைக் கண்டுபிடிக்க இவற்றை மிகச் சரியாக எண்ணி பகுப்பாய்வு செய்ய வேண்டியுள்ளது என்று கூறுகிறது ரிசர்வ் வங்கி.

இந்தக் கூற்றை நோக்கும்போது போலி பழைய ரூபாய் நோட்டுகளும் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என்பது விளங்குகிறதல்லவா. அப்படியானால் இத்திட்டம் போலி நோட்டுகளையும் நல்ல நோட்டுகளாக மாற்றிக் கொள்ள உதவியிருக்கிறது என்பதுதானே தெளிவாகிறது. இதனால் பயன் பெற்றவர்கள் யார்? யாரோ? மோடிக்கே வெளிச்சம்.

போலி நோட்டுகள் மிகச் சிறிய அளவிலேயே உள்ளதாக ரிசர்வ் வங்கியின் 2015_16 ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறதே ஒழிய சரியான விவரத்தைத் தெரிவிக்கவில்லையே! ஏன்?

இந்தப் புதிய நோட்டுகளைப் போலியாக அச்சடிக்க முடியாது என்று தெரிவித்தனர். ஆனால், இதையும் போலியாக அச்சிட்டுப் புழக்கத்தில் விடுகிறார்கள் என்பது கடந்த வார செய்தித் தாள்களில் வெளிவந்த 1.42 கோடி போலி நோட்டுகள் பறிமுதல் என்ற செய்திகளே அம்பலப்படுத்துகின்றன அல்லவா?

நோட்டுகள் அழிப்புப் பணி போர்க்கால நடவடிக்கை போன்று விரைவாக நடை-பெற்றாலும், இதே வேகத்தில் சென்றால் மொத்த நோட்டுகளும் அழிக்கப்பட இன்னும் இரண்டாண்டுகள் தேவைப்படும் என்கிறது. எனவே, ராணுவத்தின் உதவியையும் நாட ஆலோசிக்கப்படுகிறது என்கிறது ரிசர்வ் வங்கி.

இத்தனையும் நோக்கும்போது இதற்காக ஏற்படுகின்ற செலவைச் சரிகட்டுகின்ற அளவுக்கேனும் இந்தத் திட்டத்தால் அரசுக்கு ஆதாயம் கிடைத்திருக்குமா என்றே ஐயுறுகின்றான் அல்லல்பட்டேனும் அரசு வரிகளை முறையாகச் செலுத்தும் இந்தியக் குடிமகன்.

– கெ.நா.சாமி

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *