ஜாதிகள் இருக்கேடிபாப்பா
ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கான பல பணிகள், பல வகைகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. ஆனால், குழந்தைகளிடம் ஜாதியைப் பற்றி யாரும் பேசுவதில்லை.
அப்படிப் பேசாமல் இருப்பதாலேயே ஜாதி ஒழிந்துவிடும் என்றிருந்த நம்பிக்கையை தவறென்று காலம் காட்டியுள்ளது. இதைப்பற்றி அவர்களிடம் பேசி இதற்கான தீர்வை எடுக்கக்கூடிய பக்குவத்தை அவர்களிடம் உண்டாக்க வேண்டும் என்ற முயற்சிதான் இந்த ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’.
இது ஒரு புது முயற்சி! குழந்தைகளிடம் ஜாதிகள் பற்றிய எளிமையான ஒரு கலந்துரையாடல்-தான் இது.
இதை ‘‘Talkumentary’’ என்றே வகைப்படுத்துகிறார் இதைத் தயாரித்து, இயக்கிய கீதா இளங்கோவன். அனைவரும் பார்க்க வேண்டிய ‘Talkumentary’ .
இயக்குநர்: கீதா இளங்கோவன்
தொ.எண்: 94439 18808.
– உடுமலை