சீன விஞ்ஞானிகள் பூமியிலேயே சந்திரனில் உள்ள தட்பவெப்பம், காற்று, காலநிலை, ஈரப்பதம் போன்று சந்திரனில் உள்ள அனைத்து நிலைகளையும் உடைய ஓர் ஆய்வுக் கூடம் உருவாக்கி அதில் 4 மாணவர்களை வாழச் செய்கிறார்கள்.
160 சதுர மீட்டர்கள் பரப்பளவுள்ள இந்த சீலிடப்பட்ட ஆய்வுக் கூடத்தில் 4 மாணவர்கள் 200 நாட்கள் எந்தவித வெளித் தொடர்பும், உதவியும் இன்றி வாழ்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
அந்த ஆய்வுக் கூட வாழிடத்திலிருந்துகொண்டு கையசைத்துத் தங்கள் இருப்பைத் தெரிவிக்கும் படம் ஒன்றையும் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் வெளியிட்டுள்ளது.
இச்சோதனை வெற்றிபெற்றால் சந்திரனில் மனிதன் வாழ்வதற்கான ஆராய்ச்சிகளில் ஒரு படி வெற்றியாகக் கருதலாம் என்பதோடு இதை சீன நாட்டின் முன்னிலையாகவும் கொள்ளலாம்.
– செய்தி: டைம்ஸ் ஆப் இந்தியா