கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் வேளாண்மை, தோட்டக்கலை, வனவியல், உணவு, ஊட்டச்சத்தியல் மற்றும் உணவு முறையியல் (ஃபுட், நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்), பட்டு வளர்ப்பு (செரிக்கல்ச்சர்) ஆகிய பாடப்பிரிவுகளில் பி.எஸ்சி. படிக்கலாம்.
அக்ரிக்கல்ச்சுரல் என்ஜினீயரிங், தோட்டக்கலை, பயோ டெக்னாலஜி, பயோ இன்பர்மேட்டிக்ஸ், எனர்ஜி அண்ட் என்விரான்மெண்டல் என்ஜினியரிங், ஃபுட் புராசசிங் என்ஜினீயரிங், அக்ரிகல்ச்சுரல் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடப் பிரிவுகளில் பி.டெக். படிப்புகளும் பி.எஸ். (அக்ரி பிசினஸ் மேனேஜ்மெண்ட்) படிப்பும் உள்ளன.
இளம் அறிவியல் பிரிவில் உறுப்புக் கல்லூரிகளில் 915 இடங்களும் இணைப்புக் கல்லூரிகளில் 1600 இடங்களும் இளநிலை தொழில்நுட்பப் படிப்புகளில் 305 இடங்களும் உள்ளன. 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும்.
இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் குறிப்பிட்ட பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்து பிளஸ் டூ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி நிலவரப்படி, 21 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு வயது வரம்பு இல்லை.
இந்தப் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அச்சிடப்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட மாட்டாது. விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடியினருக்கு ரூ.300. தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை குறித்த விரிவான தகவல்களை இணைய தளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 4.6.2017
தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 10.6.2017
சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கவுன்சலிங்: 16.6.2017
முதல் கட்ட கவுன்சலிங்: 19.6.2017 முதல் 24.6.2017 வரை.
தொழில் கல்வி மாணவர்களுக்கான கவுன்சலிங்: 28.6.2017
விவரங்களுக்கு: http://tnau.ac.in/admission.html