ஆசிரியர் பதில்கள்…

ஜூன் 01-15

 

கே : பி.ஜே.பி. ஆட்சியில் உ.பி.யில் தாழ்த்தப்-பட்டோர் வீடுகள் எரிக்கப்படுவதற்கு எதிராய் தலித்துகளின் எழுச்சியைப் பார்த்தாவது தமிழகத்திலுள்ள தாழ்த்தப்-பட்டோர் தலைவர்கள் பாடம் பெறுவார்களா?

– கெ.நா. சாமி, சென்னை-72

: அதுபோன்று ஒற்றுமையைக் கட்ட வேண்டும். ‘தனித்தனித் தலைமை பலவீனப்படுத்துகிறது! ஒரு கட்சித் தலைவர் ‘பா.ஜ.க. பஸ்ஸில்’ ஏறி, தன் சமுதாயத்தின் நலனையேகூடப் புறக்கணித்து, புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே கடுமையாக விமர்சிக்-கிறார். அவர் எடுத்த நிலைப்பாடு தவறு என்கிறார். இடஒதுக்கீடே கூட ஒழிக்கப்பட வேண்டும் என்று ஆரியம் காதுகுளிரப் பேசி, நல்ல ‘ஆழ்வாராக’ முந்துகிறார்!

கே : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உலகத் தரத்திற்கு உயர்த்தப்படும் எனக் கூறிய பா.ஜ.க அரசு தற்போது அத்தகு பெரிய ரயில் நிலையங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குத்தகையில் விடுவதாகத் தெரிகிறதே! தடுக்க வழி என்ன?

– வே.தேன்மொழிஅரசன், படப்பை

:இதுதான் பா.ஜ.க.வின் ‘சோஷலிசம்’ என்ற பீடிகையில் அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை செயல்படுத்தும் லட்சணமா?

கே :மொழி உரிமைப்போரில் வழிகாட்டிய தமிழகத்தில், தற்போது கல்வி நிலையங்களில் தமிழ் கேள்விக்குறியா-வதற்குத் தீர்வு என்ன? – மா.நீலகண்டன், மதுரை

:தமிழ்நாட்டில் சி.பி.எஸ்.சி. (cbsc) பள்ளிகளை ஏராளமாகத் துவக்கி, ஹிந்தி, சமஸ்கிருத மொழிகளைத் திணித்து, மத்திய கல்வி முறை மூலம் மாநில உரிமையை, மறைமுகமாகப் பறித்து _ ‘ஹிந்துராஷ்டிரம்’ ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது!

கே :பொதுத் தேர்வு முடிவுகளுக்குப் பின் மாணவிகள் தற்கொலைகளை தடுக்க என்ன செய்யலாம்?

– கி.மாசிலாமணி, காஞ்சி

:மாணவ மாணவிகளுக்கு தக்க அறிவுரை கூறும் மனோதத்துவ மருத்துவர்களை வகுப்பு _ தேர்வுக்குப் பின்னர்கூட _ சிறப்புக் கூட்டம்போல் எடுக்க வைத்து, பின் கோடை விடுமுறையை விடலாம்!

பொதுவாக வாழ்வு என்பது தேர்வில் அதிக மதிப்பெண்தான் என்ற எண்ணமே மாணவர் அழுத்தத்திற்கு மூலகாரணம்!

கே :மூடநம்பிக்கைகள் ஒழிய, அறிவார்ந்த கேள்விகளைத் தொகுத்து, தினமும் சில கேள்விகளை சமூக ஊடகங்கள் வழி நமது இயக்கம் பரப்புமா?

– சி.பாரிவேந்தன், வேலூர்

:செய்தால்தான் உண்மையில் அறிவியலை வெறும் பாடத் திட்டமாகப் புகுத்தாமல், வாழ்க்கை முறையாக _ செயல்படுத்தி வெற்றி காண முடியும்!

கே :நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்சனைகள் பேச வேண்டியிருக்க நடிகர்களின் அரசியல் நுழைவு பற்றி ஊடகங்கள் முக்கியத்துவம் தருவது ஏன்?

– வீ.அண்ணாமலை, திண்டிவனம்

:‘நாய் விற்ற காசு குலைக்காது!’ ‘கருவாடு விற்ற காசு நாறாது!’ விற்பனை லாபம்தான் ஒரே குறி!

_ வெட்கப்பட வேண்டாமா?

கே :கன்னட நடிகர் இராஜ்குமார் அவர்களுக்கு ஒட்டுமொத்த மக்கள் ஆதரவு இருந்தும் அவர் அரசியலுக்கு வராத நிலையில், இரஜினியின் அரசியல் நாட்டம் அறியாமையின் அடையாளம் தானே?

– பூ.சி. இளங்கோவன், சிதம்பரம்

:அவரது அறியாமையோ என்னவோ? மக்களின், அரசியல் கட்சிகளின் அறியாமை _ இயலாமை _ பா.ஜ.க. போன்ற கட்சிகள் “தவம் கிடப்பது’’ மூலம் வெளியாகிறதே! வெட்கக் கேடு!

கே :நாளும் ஓர் ஆணை பிறப்பித்து நாட்டைக் காக்கவந்த ஆபத்பாந்தவன்-போல் காட்டிக்கொண்ட யோகி ஆதித்தியாவின் வேஷம் கலைந்து தாழ்த்தப்பட்டவர்கள் மீது ஆதிக்க ஜாதி வெறி வெளிப்பட்டு மக்கள் போராடத் தொடங்கியுள்ளனரே?

– இல.சங்கத்தமிழன், செங்கை

:ஒப்பனைகள் கலைக்கப்பட்டே தீரவேண்டும் என்பது இயற்கை விதியாயிற்றே!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *