ஜப்பானில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஜப்பானின் கல்வி, கலாசார, அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகம் (விணிஙீஜி) இத்திட்டத்தின்கீழ் படிக்கத் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு படிப்புக் கட்டணம், தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்டவை இலவசம்.
தொழில்நுட்பம், பர்சனல் கேர் அண்ட் நியூட்ரிஷன், எஜுகேஷன் அண்ட் வெல்பேர், பிசினஸ், ஃபேஷன் அண்ட் ஹோம் எக்னாமிக்ஸ், கல்சர் அண்ட் ஜெனரல் எஜுக்கேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் மூன்று ஆண்டு பயிற்சிப் படிப்பாக டிப்ளமோ படிக்கலாம். முதல் ஓராண்டில் ஜப்பானிய மொழியைப் படிக்க வேண்டும்.
தொழில்நுட்பக் கல்லூரிகளில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் கம்யூனிக்கேஷன் அண்ட் ஒர்க் என்ஜினீயரிங், மெட்டீரியல்ஸ் என்ஜினீயரிங், ஆர்க்கிடெக்சர், சிவில் என்ஜினீயரிங், மேரிடைம் என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளில் நான்கு ஆண்டு படிப்பைப் படிக்கலாம்.
சட்டம், அரசியல், கற்பித்தலியல், சமூகவியல், இலக்கியம், வரலாறு, ஜப்பானிய மொழி, பொருளாதாரம் மற்றும் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், அறிவியல் (கணிதம், இயற்பியல், வேதியியல்), எலெக்ட்ரிக் அண்ட் எலெக்ட்ரானிக் ஸ்டடீஸ், எலக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், இன்பர்மேஷன் என்ஜினீயரிங், மெக்கானிக்கல் ஸ்டடீஸ், மெக்கானிக்கல் என்ஜினீயரிங், நேவல் ஆர்க்கிடெக்சர், சிவில் என்ஜினீயரிங் அண்ட் ஆர்க்கிடெக்சர், கெமிக்கல் ஸ்டடீஸ், அப்ளைடு கெமிஸ்ட்ரி, கெமிக்கல் என்ஜினீயரிங், இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி, டெக்ஸ்டைல் என்ஜினீயரிங்.
அக்ரிகல்ச்சுரல் ஸ்டடீஸ் (அக்ரிகல்ச்சர், அக்ரிகல்ச்சுரல் கெமிஸ்ட்ரி, அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங், அனிமல் சயின்ஸ், வெட்ரினரி மெடிசின், பாரஸ்ட்ரி, புட் சயின்ஸ், பிஷரிஸ்), ஹைஜெனிக் ஸ்டடீல் (பார்மசி, ஹைஜெனிக்ஸ், நர்சிங், சயின்ஸ் (பயாலஜி), மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகிய பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்கலாம்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள், 1996_ஆம் ஆண்டு ஏப்ரல் 2_ஆம் தேதியிலிருந்து 2001-_ஆம் ஆண்டு ஏப்ரல் 1_ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
சென்னை செனடாப் சாலையில் உள்ள ஜப்பானிய துணைத் தூதரகத்தில் உள்ள கலாசார மற்றும் தகவல் துறையில் இந்த கல்வி உதவித் தொகை பெறுவதற்கான விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
விவரங்களுக்கு: http://www.chennai.in.emb-japan.go.jp/itpren/b_000069.html
தொலைபேசி எண்கள்: 044-_24323860_63