கலைஞர் அவர்கள் நமக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று சொல்ல வேண்டும். இதற்கு முன் ஆட்சியில் இருந்த கட்சிக்காரர்-களைவிட பகுத்தறிவாளராவர்.
அவருக்குப் பிறந்த நாள் மலர் வெளியிடுவது அவரது கொள்கை-களைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகும்.
மனிதர்களை இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அதாவது நம்பிக்கையாளர்கள் பகுத்தறிவாளர்கள் என்பதாகும். முன்னோர்கள் சொன்னது பழைய காலம் முதல் இருந்து வருவது என்பதற்காக எதையும் சிந்திக்காமல் கடவுள் _ மதம் _ ஜாதி _ சாஸ்திரம் என்கிற பெயரால் பல மடைமைகளைச் சிந்திக்காமல் ஏற்றுக் கொள்பவர்கள் நம்பிக்கையாளர்கள் ஆவார்கள். அறிவைக் கொண்டு ஆராய்ந்து அறிவிற்கு ஏற்றதை ஏற்றுக் கொண்டு மற்றதை தள்ளிவிடக் கூடியவர்கள் பகுத்தறிவாளர்கள் ஆவார்கள்.
இதில் நம் நாட்டில் நம்பிக்கையாளர்கள்தான் அதிகம். பகுத்தறிவாளர்கள் இருப்பது மிகமிகக் குறைவேயாகும்.
நமது கலைஞர் அவர்கள் தலைசிறந்த பகுத்தறிவுவாதி ஆவார். இத்தகைய பகுத்தறிவாளராகவும் ஆட்சிக் கலையில் அரிய ராஜதந்திரியாகவும், முன்யோசனையுடனும் அவர் நடந்து வருவதின் மூலம் தமிழர்கட்கு புதுவாழ்வு தருபவர் ஆகிறார் நமது கலைஞர். அவர் பல்லாண்டு வாழ்ந்து அவர் பணி வெற்றியடைய வேண்டுமென ஆசைப்படுகிறேன்.
– தந்தை பெரியார்
(கலைஞர் 48_வது பிறந்த நாள் மலர்)